உங்களுக்குத் தெரியுமா?: வெளி மாநிலங்களில் நீட் தேர்வெழுதிய தமிழக மாணவர்கள் 7,314 பேர்

Contrary to earlier claims, the number of Tamil Nadu students who wrote the NEET exam outside the state stood at 7314.

0
815

[vc_facebook type=”standard”][vc_tweetmeme type=”horizontal”]

தமிழ்நாட்டிலிருந்து ஒரு லட்சத்து இருபதாயிரம் மாணவர்கள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தார்கள்; 1,14,602 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினார்கள். மற்றவர்கள் எழுதாமல் போனதற்கு பணப் பிரச்சினை உள்பட பல காரணங்கள் இருக்கலாம்; நூற்றுக்கணக்கான மாணவர்களை வெளி மாநிலங்களில் தேர்வு எழுத நிர்பந்தம் செய்ததும் இதற்கு காரணமாக இருக்கலாம்.

வெளி மாநிலங்களில் வெறும் 1,500 பேர் நீட் தேர்வெழுதுவதாக சிபிஎஸ்இ வட்டாரங்கள் அப்போது சொன்னார்கள். திங்கள் கிழமையன்று நீட் தேர்வு முடிவுகள் வந்துள்ள நிலையில் சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள விவரங்கள் 7,314 தமிழக மாணவர்கள் தமிழ்நாட்டுக்கு வெளியே நீட் தேர்வு எழுதியிருப்பதை உறுதி செய்துள்ளன; 1,07,288 பேர் தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதியிருக்கிறார்கள்.

2017இல் 1200க்கு 1176 மதிப்பெண்கள் எடுத்தும் அரியலூரின் அனிதாவுக்கு டாக்டர் வாய்ப்பு மறுக்கப்பட்டது; 2018இல் 1200க்கு 1125 மதிப்பெண்கள் எடுத்தும் விழுப்புரத்தின் பிரதீபாவுக்கு டாக்டர் வாய்ப்பு மறுக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு பிப்ரவரி 1, 2017இல் சட்டமியற்றி அனுப்பிய பின்னரும் நீட்டிலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிப்பதற்கு மத்திய மோடி அரசு மறுத்து வருகிறது.

நான் அனிதா

[orc]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here