ரஷியா நடத்திய தாக்குதலில் மரியுபோல் நகரில் இதுவரை பொதுமக்கள் 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக மேலும் தெரிவித்ததாவது.
உக்ரைன் மீது ரஷியா 17-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களைக் கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றன.
அதேவேளை, தென்கிழக்கு நகரமான மரியுபோல் நகரிலும் ரஷியா வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் குடியிருப்பு பகுதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றது. இந்த தாக்குதலில் இதுவரை 1,500-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில் மரியுபோலில் சிக்கித் தவிக்கும் மக்களை வெளியேற்றும் முயற்சி தோல்வி அடைந்திருந்தாலும், மக்களை வெளியேற்ற அதிகாரிகள் மீண்டும் முயற்சித்து வருகின்றனர். என்று உக்ரைன் துணைப் பிரதமர் இரினா வெரேஷ்சு கூறினார்.
மரியுபோலில் சுமார் 3,00,000 மக்கள் தண்ணீர், குளிர் மற்றும் பசியால் அவதிப்படுகின்றனர். நகரத்துக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது மரியுபோலில் இருந்து ஓரிகிவ் மற்றும் போலோஹி வழியாக ஜபோரிஜ்ஜியா வரை ஒரே ஒரு சாலை மட்டுமே உள்ளது, மற்ற அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன என்று அவர் கூறினார்.