வெளிநாட்டில் மருத்துவக் கல்வி முடித்துவிட்டு கொரோனா, போர் போன்ற எதிர்பாராத சிக்கல்களால் பயிற்சி மருத்துவம் முடிக்காதவர்கள் இங்கே தாயகத்திலேயே அதைச் செய்யலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்திய மருத்துவ ஒழுங்குமறைய அமைப்பான தேசிய மருத்துவ ஆணையம் (NMC) இதனை அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “உக்ரைனில் போர் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில வெளிநாடுகளில் கொரோனா காரணமாக விதிகப்பட்ட தடைகள் விலக்கிக் கொள்ளப்படவில்லை.இதனால் அங்கே மருத்துவக் கல்வி முடித்து பயிற்சி மருத்துவம் செய்து கொண்டிருந்த மாணவர்கள் அதை பாதியிலேயே விட்டுவிட்டு தாயகம் திரும்பும் சூழல் உருவாகியுள்ளது.

அத்தகைய மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்கள் தாயகத்திலேயே தங்களின் பயிற்சி மருத்துவத்தப் படிப்பை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.

அதற்கு மாணவர்கள் எஃப்எம்ஜி என்ற தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும்.

ஆகையால், இத்தகைய கோரிக்கைகளோடு வரும் விண்ணப்பக்களை மாநில அரசுகளின் மருத்துவக் கவுன்சில்களே பரிசீலித்து நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.

இந்த நகர்வு உக்ரைனில் இருந்து திரும்பியுள்ள நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

மாநில மருத்துவக் கவுன்சில்கள், தேசிய தேர்வு வாரியத்தின் மூலம் எஃப்எம்ஜி மருத்துவ தகுதித் தேர்வை நடத்த உறுதி செய்யலாம். விண்ணப்பதாரர் அனைத்துத் தகுதிகளையும் உடையவராக இருந்தால் அவருக்கு தற்காலிக பதிவை மாநில மருத்துவக் கவுன்சில்கள் வழங்கலாம். அதன்படி, மாணவர்கள் 12 மாதங்களுக்கு பயிற்சி மருத்துவம் பயிலவோ அல்லது அவர்கள் ஏற்கெனவே முடித்ததிலிருந்து எஞ்சியுள்ள காலத்திற்கான பயிற்சி மருத்துவத்தை இங்கே பயிலலாம்.

இந்த பயிற்சிக் காலத்தில் கட்டணம் வசூலிக்கக் கூடாது. அதேபோல் மற்ற மருத்துவர்களுக்கு நிகராகவே ஸ்டைப்பெண்ட் எனப்படும் ஊக்கத் தொகையையும் வழங்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here