மிகவும் கீழ்த்தரமான நிலைக்கு பாகிஸ்தான் சென்றுவிட்டது: மத்திய அரசு  பாய்ச்சல் | Dinamalar Tamil News
Arindam Bagchi 

உக்ரைனிலிருந்து இதுவரை  13,300 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார். கடந்த 10 நாட்களாக உக்ரைன் மீது போர் நடத்தி வந்த ரஷ்யா, திடீரென உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தது. இதனிடையே உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில்; உக்ரைனிலிருந்து இதுவரை 13,300இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். கார்கிவ் நகரில் இருந்து இந்தியர்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர்.

Indian nationals inside an IAF C-17 aircraft after being evacuated using airfields in Romania and Hungary in view of the Ukraine conflict as part of Operation Ganga. (ANI Photo) (ANI)

இதுவரை 63 விமானங்கள் மூலம்  13,300 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அடுத்த 24 மணிநேரத்திற்கு 13 விமானங்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. கார்கிவ், பிசோச்சின் ஆகிய நகரங்களில் இன்னும் சில மணி நேரத்தில் இந்தியர்கள் அனைவரையும் வெளியேற்றிவிடுவோம், ஆனால் தற்போது பிரச்சனை சுமி நகரத்தில் உள்ள இந்திய மாணவர்களை மீட்பது சவாலான விஷயமாக உள்ளது. போக்குவரத்து சரியாக இல்லை; இதற்கு தீர்வு போர் நிறுத்தம் தான். உக்ரைன் நகரமான பிசோச்சினில் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை தான் ஆராய்ந்து வருகிறோம்; தூதரகத்தில் பதிவு செய்த அனைவரையும் வெளியற்றியுள்ளோம்.

இதையும் படியுங்கள்👇இன்று 298 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். தூதரகத்தில் பதிவு செய்யாதவர்களை அடையாளம் கண்டு அவர்களை வெளியேற்றும் பணி இன்று முடியும் என நம்புகிறேன். தற்போதைய பிரச்சனை சுமி நகரம் தான், உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நிறுத்தம் செய்ய இரு நாடுகளையும் வெளியறவுத்துறை வலியுறுத்தியுள்ளது. இந்திய மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பாக உள்ளனர், சுமி நகரத்தில் தொடர்ந்து குண்டுகள் வெடித்து கொண்டு இருப்பதால் தூதரக குழுக்கள் அங்கு செல்ல முடியவில்லை. இந்திய மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பாக உள்ளனர், சுமி நகரத்தில் தொடர்ந்து குண்டுகள் வெடித்து கொண்டு இருப்பதால் தூதரக குழுக்கள் கிழக்கு உக்ரைனுக்கு செல்ல முடியவில்லை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here