ஈரான் மீது சவுதி அரேபியா குற்றச்சாட்டு

0
164

சவுதி அரேபியாவின் இரு எண்ணெய் ஆலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு, ஈரான் ஆயுதங்களை வழங்கி உதவியதாக சவுதி அரேபிய பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் குற்றம்சாட்டியுள்ளார்.

சவுதி அரேபியாவில் அரம்கோ நிறுவனத்துக்கு சொந்தமான மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது கடந்த 14ம் தேதி ஆளில்லா விமானங்கள் மூலம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனால் அந்நாட்டின் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இந்த தாக்குதல்களை நடத்த தீவிரவாதிகளுக்கு ஈரான் தான் ஆயுதங்களையும், ஆளில்லா விமானங்களையும் வழங்கி உதவியதாக சவுதி அரேபியா குற்றம்சாட்டியுள்ளது. ரியாத் நகரில் செய்தியாளர்களை சந்தித்த அந்நாட்டின் பாதுக்காப்புத்துறை செய்தி தொடர்பாளர், துர்க்கி அல்-மால்கி தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆளில்லா விமானங்கள் மற்றும் அதிக துல்லியம் வாய்ந்த ஏவுகணைகளின் சிதைந்த பாகங்களை காட்சிப்படுத்தினார்.

இந்த ஏவுகணைகளும், ஆளில்லா விமானங்களும் நாட்டின் வடக்கு திடையிலிருந்து ஏவப்பட்டதாகவும், அவற்றை ஈரான் தான் வழங்கியது என்பது சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் உறுதியாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் 18 ஆளில்லா விமானங்களும், 7 அதி துல்லிய ஏவுகணைகளும் எண்ணெய் ஆலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் மால்கி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here