ஈரான் – அமெரிக்கா இடையே போர் பதற்றம் நிலவிவரும் நிலையில்,  180 பேருடன் சென்ற உக்ரைன் நாட்டு விமானம் ஈரானின் தலைநகர் தெஹ்ரான் விமான நிலையம் அருகே கீழே விழுந்து நொறுங்கியது.  

ஈரானில் இருந்துபுறப்பட்ட அந்த விமானம், போயிங்737 ரகத்தை சேர்ந்தது.  தொழில் நுட்பகாரணங்களால் விமானம் விபத்தில் சிக்கியதா?அல்லது தாக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.  விமானத்தில் பயணம் செய்தவர்களின் நிலைபற்றி தற்போது வரை எந்தத கவலும் இல்லை.

ஈரான் தாக்குதலை அடுத்து மத்திய கிழக்கு முழுவதும்பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், ஈரான்,ஈராக் மீது அமெரிக்க விமானங்கள் பறக்க அந்நாட்டு விமான போக்குவரத்து நிர்வாகம் அவசரகால தடை விதித்துள்ளது.

ஈராக்கில் அமெரிக்க படைகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்திய பின்னர் ஈராக், ஈரான், ஓமான் வளைகுடா மற்றும் ஈரான்-சவுதி அரேபியா இடையேயான நீர்நிலைகள், வான்வெளியில் அமெரிக்க விமானங்கள் இயங்குவதை தடை செய்வதாக அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்திய விமானங்கள் ஈரான், ஈராக், வளைகுடா வான் பகுதிக்குள் செல்ல வேண்டாம் என இந்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அது போல் தேவையின்றி இந்தியர்கள் ஈராக் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here