ஈரானுக்கு மிரட்டல் விடும் ட்ரம்ப்

0
241

ஈரான் – அமெரிக்கா இடையே மோதல் அதிகரித்த நிலையில் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

இதுகுறித்து புதன்கிழமை ட்ரம்ப் கூறும்போது, “அணு ஆயுத ஒப்பந்தம் இல்லை என்றால் நாங்கள் எவ்வளவு யுரேனியத்தை வேண்டுமானலும் வைத்திருப்போம் என்று ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்திருக்கிறார்.  இதனால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து ஈரான் கவனமாக இருக்க வேண்டும். அவை மீண்டும் உங்களை தாக்கலாம். முன்பை விட அதிகமாக தாக்கலாம்.” என்றார்.

முன்னதாக, அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் அந்நாட்டுடனான அணு ஆயுத ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது என்றும் கடுமையாக விமர்சித்தார். இதனைத் தொடர்ந்து ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது.

ஆனால், அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன. ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியவுடன் அந்நாட்டின் மீது பொருளாதரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக ஈரான் – அமெரிக்கா மோதல் வலுத்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here