ஈகைப் பெருநாள்

தர்மம் தலை காக்கும் என்பதே இந்த நாளின் செய்தி

0
468
ஆஃப்கானிஸ்தானில் ஈகைப் பெருநாளைக் கொண்டாட சுவரில் வண்ண ஓவியம் தீட்டும் இளையவர்கள்

திருக் குர் ஆன் என்கிற வேதம் அருளப்பட்டதாக நம்பப்படுகிற மாதமான ரமலான் நிறைவடைந்துள்ளது; இந்த வேதம் சரணாகதியையும் அழிவின் எச்சரிக்கையையும் நன்மொழிகளையும் பேசுகிறது. உங்களது பாதுகாப்பு, வெகுமதி, வெற்றி அனைத்துமே ஆண்டவனிடமிருந்து வருகிறது என்பதை அழகாக சொல்லுவதன் மூலமாக எந்த அவநம்பிக்கையும் இல்லாமல் அவனிடம் முற்றிலுமாக சரணடைந்து விடுங்கள் என்பதை மனதில் பதிய வைக்கிறது. நீங்கள் வைத்திருக்கும் செல்வம் முழுவதும் உங்களுக்கே சொந்தமல்ல; அதில் ஏழை, எளிய மக்களுக்கும் பங்கிருக்கிறது என்பதைத் தெளிவாக உதாரணங்களுடன் விளக்கிச் சொல்கிறது; இதனை நம்ப மறுக்கும்போது உங்களுடையதாகவே மட்டும் நீங்கள் நம்புகிற அறுவடையோ, தோட்டமோ அழிந்துபோகிறது. இதற்கு முன்னர் இந்த பூமியில் அழிக்கப்பட்ட பல சமூகங்களும் அநீதியைத் தடுக்க முடியாமல் போன சமூகங்கள் என்ற வரலாற்றுக் கதைகளைச் சொல்லி அக்கிரமங்களைப் பற்றி பாராமுகமாக இருந்துவிடாதீர்கள் என்று அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது; உங்களைப் பந்தயங்களில் முந்திக் கொள்வதைப்போல நற்செயல்களில் முந்திக்கொள்ளச் சொல்கிறது திருக் குர் ஆன். நன்மை செய்தல் என்கிற ஒரு வழியில்தான் ஆண்டவனின் அன்பைப் பெற முடியுமென்று மக்களிடம் பேசுகிறது இந்த வேதம். அனைவருக்கும் ஈகைப் பெருநாள் வாழ்த்துகள்.

போர் விமானங்களை நிறுத்துங்கள்; நாங்கள் ஈகைப் பெருநாளைக் கொண்டாட வேண்டும்
போர் விமானங்களை நிறுத்துங்கள்; நாங்கள் ஈகைப் பெருநாளைக் கொண்டாட வேண்டும்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்