வானில் உயர்ந்து நிற்கும் பச்சை நிற மாடம் கொண்ட பள்ளிவாசல்கள் நிறைந்த ‘சிறிய மெக்கா’வில் இனி சிறுவர்கள் வகுப்புகளுக்கோ தொழுகைக்கோ செல்ல முடியாது.

ஆத்திகத்தைப் பின்பற்றும் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி, ஹுய் முஸ்லிம்கள் வாழும் மதச் சுதந்திரம் கொண்ட மேற்கு சீனப் பகுதியான லிங்சியாவில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மத செயல்பாடுகள் மற்றும் கல்வியில் ஈடுபட தடை விதித்துள்ளது.

முஸ்லிம் பெரும்பான்மை உள்ள சிஞ்ஜியாங் பகுதியில் ”மத தீவிரவாதம்” மற்றும் ”பிரிவினைவாதத்தை” ஒழிக்க மறு-கல்வி முகாம்களுக்கு உய்குர் மக்களை அனுப்பி அவர்களிடமிருந்து குரானை பறித்து, தாடி வளர்க்கக் கூட தடை விதித்துள்ளது சீன அரசு.

தற்போது, இதே போன்ற கண்காணிப்பும் அடக்குமுறையும் தங்களுக்கு நேருமோ என ஹுய் முஸ்லிம்கள் அஞ்சுகின்றனர். கடந்த வருடத்தில் நிலைமை மாறிவிட்டதாக சொல்லும் அடையாளம் வெளியிட விரும்பாத இமாம் ஒருவர், “வெளிப்படையாக சொல்லவேண்டும் என்றால் சிஞ்ஜியாங்கில் செய்ததை இங்கும் செய்வார்கள் என அஞ்சுகிறேன்,” என்றார்.

உள்ளூர் அதிகாரிகள், அதிகாரப்பூர்வமாக பள்ளிவாசல்களில் படிக்க அனுமதி உள்ள 16 வயதிற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கையை கடுமையாக குறைக்கின்றனர், புதிய இமாம்களுக்கான சான்றிதழ் வழிமுறைகளை கட்டுப்படுத்துகின்றனர். பள்ளிவாசல்களில் தேசிய கொடி ஏற்றவும் ”ஒலி மாசுபாடை” குறைக்க தொழுகைக்கு அழைக்கும் ஒலிபரப்பை நிறுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

“முஸ்லிம்களை மதச்சார்பற்றவர்களாக்கி இஸ்லாமை வேரிலேயே அறுக்க நினைக்கின்றனர் என்றும் தற்போது, மதங்களை நம்ப குழந்தைகள் அனுமதிக்கப்படுவதில்லை என்றும் கம்யூனிஸம் மற்றும் கட்சியின் மீது மட்டுமே நம்பிக்கை வைக்க அனுமதி உண்டு என்றும் அடையாளம் வெளியிட விரும்பாத இமாம் கூறினார்.

அவரது பள்ளிவாசலில் கோடை மற்றும் குளிர்கால விடுமுறைகளில் குரானின் அடிப்படைகளை கற்க 1,000 சிறுவர்களுக்கு மேல் வருவார்கள். தற்போது அந்த வளாகத்திற்குள் அவர்கள் நுழையவே தடை விதிக்கப்பட்டுள்ளது. அவரது வகுப்பறைகள் முழுவதும் சவுதி அரேபியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட பெரிய பெரிய அரபு மொழி நூல்கள் உள்ளன. ஆனால், அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட 16 வயதிற்கு மேற்பட்ட 20 பேர் மட்டுமே தற்போது அவற்றை பயன்படுத்த முடியும்.

குழந்தைகளின் நன்மைக்காக மற்றும் அவர்கள் ஓய்வெடுத்து மதச்சார்பற்ற பாடங்களை கற்பதற்காகவே குரான் கற்பது தடை செய்யப்பட்டுள்ளதாக பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது.

“எங்களுக்கு பயமாக இருக்கிறது, மிகவும் பயமாக இருக்கிறது. இப்படியே போய்க்கொண்டிருந்தால் ஓரிரு தலைமுறைக்குப் பிறகு எங்கள் பாரம்பரியம் காணாமல் போய்விடும்,” என்று கூறுகிறார் 45 வயதாகும் காப்பாளரான மா லான்.

கிராமத்திலிருக்கும் சுமார் 70 சிறுவர்கள் அவரது உள்ளூர் பள்ளிவாசலில் இருக்கிறார்களா என கண்காணிப்பாளர்கள் அடிக்கடி சோதனையிடுகின்றனர். ஆரம்பத்தில், சூரிய உதயத்திற்கு முன்பு இரகசியமாக பாடம் நடத்த முயற்சித்தபோதும் எதிர்ப்புகள் வருமோ என்று அஞ்சி அதனை கைவிட்டார்.

பள்ளிவாசலுக்கு சென்று நாளொன்றுக்கு ஐந்து மணிநேரம் படிப்பதற்கு பதிலாக அவரது 10 வயது மகன் தற்போது வீட்டிலிருந்த படி தொலைக்காட்சி பார்க்கிறான். இமாம் ஆகவேண்டும் என தனது மகன் விரும்பினாலும் பணம் சம்பாரிக்கவும் கம்யூனிஸ்ட் பணியாளராகவும் அவனது பள்ளி ஆசிரியர்கள் ஊக்குவிப்பதாக சொல்கிறார்.

2012 இன் அரசாங்க புள்ளிவிவரங்கள் படி 1 கோடி ஹுய் மக்கள் உள்ளனர். நாட்டிலுள்ள முஸ்லிம்களில் இது பாதியளவாகும். லிங்சியாவில் பெரும்பான்மை ஹான் இன மக்களுடன் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் இவர்களால் தங்களது மத வழிபாடுகள் மற்றும் வழக்கங்களை தடையின்றி செயல்படுத்த முடிகிறது.

சிறுவர்களை பள்ளிவாசலுக்குள் அனுப்பி குரானைப் படிக்க வைக்க அல்லது மத ரீதியான செயல்களில் ஈடுபடத்த தனிநபர்களோ அமைப்புகளோ ஆதரவு அளிக்காமல், அனுமதிக்காமல், ஒருங்கிணைக்காமல் அல்லது வழிநடத்தாமல் பார்த்துக்கொள்ளும் படி உறுதியளிக்கும் தீர்மானத்தில் உள்ளூர் அதிகாரிகள் ஜனவரி மாதம் கையெழுத்திட்டனர்.

இதற்கு எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் தெரிவிக்க இமாம்கள் நிர்பந்திக்கப்பட்டபோது ஒருவர் மட்டும் மறுப்பு தெரிவிக்க அதிகாரிகள் கோபமடைந்தனர், பிற இமாம்கள் தர்ம சங்கடத்திற்கு ஆளாகி அவரை ஒதுக்கிவைத்தனர்.

”எனது நம்பிக்கைக்கு முரணாக நான் செயல்பட முடியாது. இஸ்லாம் மதத்தின் படி தொட்டிலிலிருந்து கல்லறை வரை கல்வி கற்கவேண்டும். குழந்தைகள் பேசத் துவங்கியதும் எங்களது உண்மைகளை அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க துவங்கவேண்டும்,” என்றார் அவர்.

“கலாச்சார புரட்சியின் போது இருந்த அடக்குமுறையை நோக்கி நாம் மெல்ல திரும்பிக்கொண்டிருப்பது போல தோன்றுகிறது,” என்றார். 1966 முதல் 1976 வரையிலான அக்காலக்கட்டத்தில் உள்ளூர் பள்ளிவாசல்கள் இடிக்கப்பட்டு கழுதை கொட்டகைகள் ஆக்கப்பட்டதாகக் கூறினார்.

பாடம் நடத்த அனுமதியளிக்கும் சான்றிதழ்களை அதிகாரிகள் வெகு சிலருக்கே வழங்குவதாகவும், அரசு அனுமதிபெற்ற கல்வி நிலையங்களில் பட்டம் பெற்றவர்களுக்கு மட்டுமே தற்போது வழங்கப்படுவதாகவும் பிற இமாம்கள் குற்றம்சாட்டினர்.

”தற்போது எங்களுக்கு போதுமான அளவு உள்ளனர், ஆனால் எதிர்காலத்தை எண்ணி அஞ்சுகிறேன். இனி மாணவர்கள் இருந்தாலும் தரமாக பாடம் நடத்த எவரும் இருக்கமாட்டார்கள். லிங்சியா சிறுவர்கள் தடை மற்றும் சீனாவின் திருத்தப்பட்ட மத ஒழுங்குமுறைகள் குறித்து பதிலளிக்க உள்ளூர் அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

அனுமதி இல்லாத அனைத்து மத செயல்பாடுகளுக்கும் கடுமையான தண்டனைகள் வழங்க புதிய விதிகள் இயக்கப்பட்டுள்ளன. மத பாரம்பரியங்களை அழிக்கவும் சித்தாந்த ரீதியான விவகாரங்களை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் சீன அரசாங்கம் சிறுவர்களை குறிவைப்பதாக ஆம்னெஸ்டி இண்டர்நேஷனலில் சீன ஆராய்ச்சியாளராக இருக்கும் வில்லியம் லீ கூறினார்.

சிஞ்சியாங்கில் ஏற்பற்ற பதற்றமான சூழலைத் தொடர்ந்தே லிங்சியாவில் இதுபோன்ற மாற்றங்கள் கொண்டுவரப்படுவதாக மற்றொரு இமாம் கூறினார். மத நம்பிக்கை வெறியாக மாறி, தீவிரவாதமாக வளர்ந்து பயங்கரவாத செயல்பாடுகளுக்கு வித்திடும் என அரசாங்கம் நம்புவதால் தங்களை மதச்சார்பற்றவர்களாக மாற்ற நினைப்பதாக அவர் விளக்கினார்.

சிஞ்ஜியாங்கில் சுதந்திரம் இல்லாததால் குரான் கற்க பெற்றோர் தன்னை ஐந்து வயதில் லிங்சியாவிற்கு அனுப்பியதாக சொல்லும் இளம் அறிஞர், இங்கேயே தங்க விரும்புவதாகக் கூறினார்.

Courtesy : News18.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here