மீ2 விவகாரத்தில் அதிகம் சேதாரமான பிராந்திய சினிமாத்துறையில் மலையாள சினிமாவுக்கே முதலிடம். நடிகையை காரில் கடத்தி பாலியல் தொல்லை, முன்னணி நடிகையாக இருந்தாலும் படுக்கைக்கு அழைக்கும் போக்கு, மீறி கேட்டால் வாய்ப்பு தராமல் ஒதுக்குவது என்று பிற்போக்கின் பிறப்பிடமாக உள்ளது சேட்டன்களின் சினிமா. அதில் சிகரம் வைத்தது போல் மேலுமொரு நடிகையின் குற்றச்சாட்டு.

பர்மா, பிசாசு போன்ற படங்களில் நடித்தவர் கனி குஷ்ருதி. மா குறும்படத்தில் இவரது நடிப்பு பேசப்பட்டது. பல மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்போது வாய்ப்பு வந்தும் மலையாளப் படங்களை விலக்க ஆரம்பித்துள்ளார்.
Kani Kusruti malayalam
மலையாளப்பட தயாரிப்பாளர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் வாய்ப்புக்கு பதிலாக தன்னை படுக்கைக்கு அழைப்பதாகவும், அப்படி அட்ஜெஸ்ட் செய்ய மறுத்து படவாய்ப்புகளை வேண்டாம் என்று துறந்ததாகவும் கனி குற்றம்சாட்டியுள்ளார். கனியை சம்மதிக்க வைக்க அவரது அம்மாவிடமே பேசியிருக்கிறார்கள் என்பது, மலையாள சினிமா எந்தளவு சீரழிந்து போயுள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டு.

ஒரு டஜன் ஸ்ரீரெட்டிகளாவது மலையாள சினிமாவின் அந்தப்புர முகத்தை வெளிச்சம் போட்டு காட்டினால்தான் மலையாள சினிமா திருந்தும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here