நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி புதன்கிழமை (இன்று) உரையாற்றினார். அவர் பேசும்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளின் அமளிகளுக்கிடையே பிரதமர் மோடி ஆவேசமாக பேசினார்.

1. தூய்மை இந்தியா, மேக் இன் இந்தியா, சர்ஜிக்கல் ஸ்டிரைக்ஸ், யோகா தினம் இவற்றையெல்லாம் கேலி செய்த நீங்கள், ஓபிசி ஆணைய மசோதா, முத்தலாக் மசோதா உள்ளிட்டவைகளை ஏன் எதிர்க்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

2. மகாத்மா காந்தி விரும்பிய இந்தியா வேண்டும் என்பதே தனது ஆசை என்றும், சுதந்திரத்திற்குப் பின்னர் காங்கிரஸ் தேவையில்லை என்றும் கூறியுள்ளதாகவும், அதனையே தான் விரும்புவதாகவும் தெரிவித்தார். எமர்ஜென்சி, ஃபோபர்ஸ் போன்ற ஊழல்களைக் கொண்ட (இந்திரா) காந்தியின் இந்தியாவைக் காங்கிரஸ் வேண்டும் என்கிறது என குற்றம் சாட்டினார்.

3. காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக் காலத்தில் பிற நாடுகள் அளவுக்கு இந்தியா வளர்ச்சி அடையவில்லை என்றும், ஒரு குடும்பத்தின் வளர்ச்சியை மட்டுமே கவனத்தில் கொண்டிருந்ததாகவும் குற்றம் சாட்டினார். மக்கள் தங்களை நாடாளுமன்றத்தில் அமர வைத்ததை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்ள மறுப்பதாகத் தெரிவித்தார்.

4. பாஜகவைக் குறை கூறுவதாக நினைத்துக்கொண்டு நாட்டை பழிக்கின்றனர் எனவும் குற்றம் சாட்டினார்.

5. முத்தலாக் பற்றி பேசுக்போது, “இந்து சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இரண்டு திருமணம் செய்த காரணத்திற்காக சிறை சென்றால் சந்தோசப்படும் நீங்கள், முத்தலாக் விவகாரத்தில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் சிறை சென்றால் மட்டும் ஏன் வருத்தப்படுகிறீர்கள்?” என கேள்வி எழுப்பினார்.

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்