இவர்தான் ‘தளபதி 65’ பட இயக்குனர்

Thalapathy Vijay is currently busy shooting for 'Master', directed by Lokesh Kanagaraj of Kaithi fame. Meanwhile, talks about his next film has been doing the rounds.

0
258

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் நடிகர் விஜய் தற்போது நடித்து வருகிறார். இந்தப்படத்தில் விஜய்யுடன் மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், நாசர், சஞ்சீவ், ரம்யா, ரமேஷ் திலக் உள்பட பலர் நடிக்கிறார்கள். முதல் முறையாக விஜய் சேதுபதி இந்தப்படத்தில் விஜய்யுடன் நடித்து வருகிறார். அனிருத் இசை அமைக்க, சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார்.

இப்படம் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இது ஒருபுறம் இருக்க, தற்போது விஜயின் அடுத்த படமான ‘தளபதி65′ குறித்த தகவல்கள் கசிந்துள்ளன. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கவுள்ளது என்பது முன்னதாகவே உறுதியாகிவிட்ட நிலையில் யார் இயக்குநர் என்பது கேள்விக்குறியாகவே இருந்தது.

இந்நிலையில், தளபதி 65 திரைப்படத்தை சுதா கொங்கராதான் இயக்கவுள்ளார் என  சினிமா வட்டாரங்களிலிருந்து
நம்பத்தகமான தகவல் வெளியாகியுள்ளது. 

பல இயக்குனர்களின் பெயர்கள் வலைத்தளங்களில் ஊகிக்கப்பட்டு வந்த நிலையில், தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் பெரிய பட்ஜட்டில் படம் பண்ணலாம் என விஜய்யிடம் கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து, சன் பிக்சர்ஸ் விஜய்யிடம் இயக்குனர் சுதா கொங்கராவிடம் கதை கேட்கச் சொன்னார்களாம். கதை கேட்ட விஜய், சுதா கொங்கராவின் இயக்கத்தின் சூர்யா நடித்து வெளிவரவுள்ள திரைப்படத்தைப் பார்த்துவிட்டு முடிவு சொல்வதாக கூறியுள்ளார். பின், படத்தைப் பார்த்த விஜய், சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க ஓகே சொன்னதாகக் தெரிய வருகிறது.

இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெகு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் பணிபுரிய நடிகர் விஜய்க்கு சம்பளம் 100 கோடி என்று தெரிவிக்கப்பட்ட நிலையில்,தற்போது சம்பளத்திற்குப் பதிலாக படத்தின் லாபத்தில் ஷேர் கொடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here