மாநில ஆளுநர் மற்றும் முதல்வர் வாகனங்களுக்காக பத்து நிமிடம் வரை போக்குவரத்தை நிறுத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் துரைசாமி என்பவர், மனுத் தாக்கல் செய்தார். அதில், முதல்வர் கோட்டைக்கு செல்லும்போது, அவர் செல்லும் சாலைகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நிறுத்தப்படுகிறது என்றும், அவசர வேலைக்காகச் செல்பவர்கள், மருத்துவமனைக்குச் செல்பவர்கள் உள்ளிட்டோர் இதனால் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

high

இந்த மனுவினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு, ஆளுநர், முதல்வர் மற்றும் தலைமை நீதிபதி ஆகியோரின் வாகனங்கள் செல்வதாக இருக்கும்பட்சத்தில் ஐந்து முதல் 10 நிமிடங்கள் வரை போக்குவரத்தை நிறுத்தலாம் என்று உத்தரவிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: குஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் போராட்டம்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here