இளையராஜா வழியாக சமூகத்திற்குச் சொல்லப்படும் கருத்தின் வழியாக ஒரு அரசியல் சூழ்ச்சி நடத்தப்படுகிறது – பா.ரஞ்சித்

0
298

மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டு எழுதிய புத்தகத்தின் முன்னுரையை இளையராஜாதான் எழுதினாரா என்பதே எனக்குச் சந்தேகமாகத்தான் உள்ளது என்று பா.ரஞ்சித் கூறியுள்ளார். 

சாதி, மதத்திற்கு எதிராக ஒரு சமூகநீதி மாடல் இங்கு உருவாகி வருகிறது. அத்தகைய மாடலை இளையராஜாவை வைத்து உடைக்க பாஜக முயற்சிக்கிறது என்று திரைப்பட இயக்குநரான பா. ரஞ்சித் குற்றம் சாட்டியுள்ளார்

கலை என்பது யாரிடம் எல்லாம் சென்று சேருகிறது. கலை மற்றும் கலைஞர்களின் மதிப்பு என்ன? அவர்கள் பேசக்கூடிய கருத்துக்கள் சமூகத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் கலைஞர்கள் உணர் வேண்டும். அந்த வகையில் கலைஞர்களுக்கு சமூக பொறுப்புணர்வு அவசியம் இருக்க வேண்டும்” என்று பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

ஒரு சாராரிடம் இருந்த இசையை ஜனநாயகத் தன்மையுடையதாக எல்லாருக்குமானதாக மாற்றியதில் இளையராஜாவின் பங்கு மிக அதிகம் என்று பா.ரஞ்சித் கூறியுள்ளார்.

சமூகத்தில் பெரிதும் மதிக்கக்கூடிய ஒரு கலைஞரான இளையராஜா வழியாக சமூகத்திற்குச் சொல்லப்படும் கருத்தின் வழியாக ஒரு அரசியல் சூழ்ச்சி நடத்தப்படுகிறது. மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டு எழுதிய புத்தகத்தின் முன்னுரையை இளையராஜாதான் எழுதினாரா என்பதே எனக்குச் சந்தேகமாகத்தான் உள்ளது என்று பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here