இளையராஜா-எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இடையேயான காப்புரிமை பிரச்சனை தனக்கு அதிர்ச்சியளிப்பதாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், தனது திரையுலக பயணத்தைத் துவங்கி 50 ஆண்டுகள் ஆகின்றன. இதனைக் கொண்டாடும் வகையில் தற்போது உலகம் முழுவதும் பல நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களுக்கு தன்னிடம் உரிய அனுமதி பெற்று ராயல்ட்டி வழங்காமல் மேடை நிகழ்ச்சிகளில் பாடக்கூடாது என்று எஸ்.பி. பாலசுப்பிரமணியம் , பாடகி சித்ரா உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனையடுத்து இளையராஜாவின் இந்த நடவடிக்கை குறித்து பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் பலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இதையும் படியுங்கள் : சபரிமலை ஐயப்பன் கோயிலின் பெயர் மாற்றம்

இந்நிலையில் இளையராஜா சார்பில் அவரது காப்புரிமை ஆலோசகர் பிரதீப்குமார்,”எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு நோட்டீஸ் அனுப்பியதை மக்கள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். நோட்டீஸ் அனுப்புவது என்பது ஒரு வழக்கமான நடவடிக்கைதான். இதனால் இளையராஜாவின் பாடல்களைப் பாடவேண்டாம் என கூறவில்லை. உரிய அனுமதி பெற்று ராயல்ட்டி கொடுத்து பயன்படுத்திக்கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சாதாரணமாக மேடை நிகழ்ச்சிகள் செய்பவர்களிடம் இருந்து ராயல்ட்டி எதுவும் எதிர்பார்க்கவில்லை” என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : ராஜஸ்தானில் பள்ளி மாணவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். சீருடை?

இது குறித்து இளையராஜா-எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இடையேயான காப்புரிமை பிரச்சனை தனக்கு அதிர்ச்சியளிப்பதாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர்,”இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனை அதிர்ச்சியளிக்கிறது. இவர்கள் இடையில் ஏற்பட்டுள்ள காப்புரிமை பிரச்சனை விரைவில் சுமூகமான முறையில் முடிவுக்கு வர வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

twitter
இதையும் படியுங்கள் : “ஓபிஎஸ் அணி காணாமல் போய் விடும்”: டிடிவி தினகரன்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்