இளையராஜா இசையை நிராகரித்தாரா மணிகண்டன் ?

The film is both helmed and bankrolled by Kaaka Muttai fame M Manikandan under the banner of Tribal Arts Productions with Vijay Sethupathi and Sameer Bharath Ram co-producing the film.

0
306

இயக்குனர் மணிகண்டன் ‘கடைசி விவசாயி’ படத்திற்காக இளையராஜா இசையமைத்த பின்னர், அந்த பின்னணி இசை பிடிக்கவில்லை எனக் கூறியிருப்பது தமிழ்த் திரையுலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்தப் படத்திற்கான பின்னணி இசையை இளையராஜா அமைத்துக் கொடுத்த பின்னர், அவருக்கு விருப்பமான விதத்தில் அந்த இசை அமையவில்லை என மணிகண்டன் நினைத்தாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், தனக்கு வேண்டியதை இளையராஜாவிடம் சொல்லிப் பெற முடியவில்லை எனத் தெரிவித்து, தற்போது சந்தோஷ் நாராயணனிடம் சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரும் விவசாயத்திற்கு முக்கியத்துவம் தரும் ‘வெள்ளை யானை’ படத்திற்கு இசையமைப்பதால் முதலில் தயங்கினாராம். இருந்தாலும் ‘கடைசி விவசாயி’ படத்தின் கதையைக் கேட்ட பின் அது வேறு ஒரு கதை என்பதால் தற்போது இசையமைக்க சம்மதித்திருக்கிறார் என்கிறார்கள்.

இசையமைப்பாளராக கடந்த 45 வருடங்களாக முடிசூடா மன்னனாக வலம் வரும் இளையராஜாவிற்கு இதுவரை நிகழாத ஒரு அவமதிப்பு இது என திரையுலகத்தில் மணிகண்டனைப் பற்றி பலவாறாகப்பேசுவது நம் காதுகளிலேயே விழுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here