இளைஞர்களுக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு

0
697

ஐக்கிய அரபு குடியரசு நாடுகளில் ஒன்றான சார்ஜாவில் வேலைவாய்ப்பு உள்ளதாக தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஐக்கிய அரபு குடியரசு நாடுகளில் ஒன்றான சார்ஜாவிற்கு எட்டு வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்துடன் 21 வயது முதல் 35 வயதிற்குட்பட்டு பி.காம் தேர்ச்சி பெற்று கணக்குப் பிரிவில் அனுபவமுள்ள இரண்டு கிளார்க் (Clerk) மற்றும் தட்டச்சர்கள், 30 முதல் 35 வயதிற்குட்பட்டு செல்லத்தக்க ”ஐக்கிய அரபு குடியரசு ஓட்டுநர் உரிமம்” வைத்துள்ள ஓட்டுநர்கள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கான பணி விவரங்கள், அனுபவம், வயது வரம்பு, ஊதியம், மற்றும் இதர சலுகைகளை http://omcmanpower.com/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

அடிப்படைத் தகவல்களை தெரிந்துகொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்