விக்ரம் நடிக்கும் பிரமாண்ட புராணப் படத்தில், இளவயது விக்ரமாக நடிக்க ஆள்கள் தேவை என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

விக்ரம் கௌதம் இயக்கத்தில் துருவநட்சத்திரம் படத்திலும், ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் கடாரம் கொண்டான் படத்திலும் நடித்து வருகிறார். துருவநட்சத்திரம் படத்தில் இனி எட்டு நாள் படப்பிடிப்பே மீதமுள்ளது. கடாரம் கொண்டான் இப்போதுதான் தொடங்கியுள்ளது. மலையாள இயக்குநர் அன்வர் ரஷீத் தமிழ், மலையாளத்தில் இயக்கும் படத்திலும் விக்ரம் நடிக்க உள்ளார். இவை தவிர விக்ரம் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கும் மற்றெnரு திரைப்படம் மஹாவீர்கர்ணா.

புராண கதையை பின்னணியாகக் கொண்டு பெரும் பொருட்செலவில் இப்படம் தயாராகிறது. இதில் விக்ரமின் இளவயது தோற்றத்தில் நடிக்க 8 முதல் 16 வயதுவரை உள்ள விக்ரமின் சாயல் கொண்ட நடிகர்கள் தேவை என்று அறிவித்துள்ளனர்.

மேலே குறிப்பிட்ட வயது வரம்புக்குள், விக்ரமின் சாயல் உள்ள எவரேனும் நடிப்பு ஆசையில் இருந்தால் சம்பந்தப்பட்டவர்களை அணுகலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here