இளம்பெண்ணை கண்மூடித்தனமாகத் தாக்கிய டெல்லி காவல் ஆய்வாளரின் மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இளம்பெண் ஒருவரை இளைஞர் ஒருவர் டெல்லி அலுவலகம் ஒன்றில் கண்மூடித்தனமாகத் தாக்கும் வீடியோ ஒன்று வைரலானது . டெல்லியின் உத்தம் நகரில், செப்டம்பர் 2 ஆம் தேதி இந்த அதிர்ச்சியளிக்கும் வீடியோ, ஒரு அலுவலகத்துக்குள் எடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

அந்த வீடியோவில் இளம் பெண்ணைத் தாக்குவது விசாரணையில் அந்த இளைஞர் டெல்லி காவல்துறையில் ஆய்வாளராகப் பணியாற்றும் அசோக் சிங் தோமரின் மகன் ரோஹித் தோமர் என்பது தெரிய வந்தது. இது குறித்து யாரும் வழக்குப் பதிவு செய்யாத நிலையில், ரோகித்தை மணமுடிக்க இருந்தப் பெண், போலீஸில் புகார் தெரிவித்துள்ளார். மேலும், அவர் தனது திருமணத்தையும் ரத்து செய்துள்ளதாக கூறியுள்ளார்.

இதையடுத்து வீடியோவில் வினோத்திடம் அடி வாங்கும் பெண் போலீஸில், ‘ரோகித் தோமர், அவரது நண்பரின் அலுவலகத்துக்கு என்னை அழைத்தார். அப்போது என்னை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார். நான் இது குறித்து போலீஸிடம் கூறுவேன் என்று சொன்ன போது என்னை தாக்க ஆரம்பித்தார்’ என்று எழுத்துபூர்வமாக புகார் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘ஒரு வாலிபர், இளம் பெண்ணை தாக்கும் வீடியோ குறித்த சம்பவம் என் கவனத்துக்கு வந்தது. இது குறித்து டெல்லி கமிஷனருக்கு போன் மூலம் பேசியுள்ளேன். உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அவருக்கு உத்தரவிட்டுள்ளேன்’ என்று டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து ரோகித் தோமர் டெல்லி போலீஸால் கைது செய்யப்பட்டுள்ளார்.

27

Courtesy : NDTV

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்