• மருதாணி இலையை 20 நிமிடம் நீரில் ஊற வைத்து அதை பசையாக்குங்கள். அதில் கொஞ்சம் எலுமிச்சைச் சாறை கலந்து அப்படியே ஒரு மணி நேரத்திற்கு விட்டுவிடுங்கள். பிறகு அதைத் தலை முடியில் தேய்த்து அரைமணி நேரம்ஊறவிட்டுப் பிறகு அலசி விடவும். தலைமுடிக்கு நிறமும் ஒளியும் கிடைக்கும்.
  • மருதாணி இலை, கறிவேப்பிலை, வெந்தயக்கீரை எல்லாம் ஒரு கைப்பிடி எடுத்து அரைத்து அந்த விழுதை ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய்யில் அரைமணி நேரம் இளஞ்சூட்டில் காய்ச்சவும். இந்த எண்ணெய்யை தினமும் தலையில் தேய்த்துவர தலைமுடி நரைக்காது.
  • மருதாணி இலையை ஒரு கைப்பிடி எடுத்து அத்துடன் ஒரு மஞ்சள் துண்டு, சிறிது வசம்பு, சிறிது கற்பூரம் ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கால் ஆணி மீது வைத்து ஓர் இலையால் மூடித் துணியால் கட்டிவந்தால் கால் ஆணி மறைந்துவிடும். இதைத் தொடர்ந்து செய்துவர வேண்டும்.
  • நல்லெண்ணெய் காய்ந்தவுடன்  அதில் மருதாணி இலைகளை போட்டு சடசடவென வெடித்தவுடன் சட்டியை இறக்கி வைத்து, எண்ணெய் ஆறிய பின் மை போல் அரைத்து, பின் தேவையான அளவு துணியில் பூசி, புண் மீது வைத்து கட்டினால் ஆறாத புண் ஆறும்.
  • கை விரல் நகங்களில் சொத்தை விழுந்திருந்தால் மருதாணியை அரைத்து விரல் நகங்களின் மீது தொடர்ந்து பற்று போட்டு வந்தால் நகங்களில் சொத்தை விழுவது மறைந்துவிடும்.
  • மருதாணி இலைகளுடன் சிறிது படிகார உப்பைக் கலந்து விழுது போன்று அரைத்து நகச்சுற்றியின் மீது பற்றுப் போட்டால் நகச்சுற்று நீங்கிவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here