இலவச திறன் எய்தும் பயிற்சித்திட்டம்: தமிழக அரசு அறிவிப்பு

0
557

தனியார்த் துறையில் வேலைவாய்ப்பினை பெறும் வகையில் பாதுகாப்பு சேவைப் பணிகள் குறித்து இலவச திறன் எய்தும் பயிற்சித்திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அடுக்குமாடி கட்டிடங்கள், தொழில் நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள் என பெருகிவரும் வளர்ச்சிக்கு ஏற்ப பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும் போது பயிற்சி பெற்றவர்கள் மிக குறைவான அளவில் உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு, தமிழ் நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வாயிலாக இளைஞர்கள், தனியார்த் துறையில் வேலைவாய்ப்பினை பெறும் வகையில் பாதுகாப்பு சேவைப் பணிகள் குறித்து 21 நாள் திறன் எய்தும் பயிற்சியினை தமிழ் நாடு காவல் துறையுடன் இணைந்து வழங்க உள்ளது. இத்திறன் எய்தும் பயிற்சி முழுக்க இலவசமாகும் என தெரிவித்துள்ளது.

பயிற்சிக்கான விபரங்கள்

வயது வரம்பு : 18 முதல் 45க்குள்

நடைபெறும் இடம் : சென்னை (அசோக் நகர் காவல்துறை பயிற்சி மைதானம்), காஞ்சிபுரம், திருவள்ளுர், வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், கரூர் மற்றும் திருவாரூர்

சான்றிதழ்கள் : கல்விச் சான்று, சாதிச் சான்று, இருப்பிட முகவிரிக்கான சான்றாக குடும்ப அடையாள அட்டையின் அசல் மற்றும் சமீபத்தில் எடுக்கப்பட்ட 2 புகைப்படங்கள் ( பாஸ்போர்ட் அளவு). இச்சான்றிதழ்களின் 2 நகல்களுடன், வழங்கப்படும் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தரவேண்டும்.

விண்ணப்பங்கள் வழங்கும் தேதி : அக்.12 மற்றும் அக்.13

இடம் : மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்