இலவசமாக சினிமா பார்க்க வேண்டுமா? – சென்னை பாடிக்கு வாருங்கள்

0
193

சினிமா வேலைநிறுத்தத்தால் திரையுலகமும், ரசிகர்களும் பாதிக்கப்பட்டிருக்கிற நேரத்தில் ஒரு அபூர்வ செய்தி. பாடியில் உள்ள திரையரங்கில் பணம் இல்லாமல் இலவசமாக படம் பார்க்கலாம் என அறிவித்துள்ளனர்.

பாடியில் இயங்கி வந்த சிவசக்தி திரையரங்கு பாடியின் அடையாளமாக விளங்கியது. கடந்த 10 வருடங்களாக அத்திரையரங்கு இயங்கவில்லை. தற்போது சிவசக்தி சினிமாஸ் என்ற பெயரில் இரு திரையரங்குகளுடன் திறந்திருக்கிறார்கள். மார்ச் 16 முதல் சென்னை தவிர்த்து திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் சிவசக்தி சினிமாஸ் மார்ச் 16 மாலை முதல் மார்ச் 18வரை 3 தினங்களுக்கு படம் பார்க்க வருகிறவர்களிடம் கட்டணம் வசூலிப்பதில்லை என்று அறிவித்துள்ளது. ஆம், முழு இலவசமாக படங்கள் பார்க்கலாம்.

பாகுபலி 2, ஜுமான்ஜி – வெல்கம் டு தி ஜங்கிள், ஸ்பைடர்மேன் – ஹேnம் கமிங், தி ஜங்கிள் புக், தங்கல் ஆகிய படங்கள் தற்போது இரு திரையரங்குகளிலும் திரையிடப்பட்டுள்ளன. இந்த ஐந்து படங்களையும் மக்கள் இலவசமாக கண்டுகளிக்கலாம்.

இதையும் படியுங்கள்: ஜம்மு காஷ்மீரிலும் பாஜக கூட்டணி உடைகிறது?

இதையும் படியுங்கள்: #AdivasiMadhuKilled: “பழங்குடிகளின் பசியைக்கூட போக்கவில்லை நாம்”

இதையும் படியுங்கள்: #HasiniRapeAndMurder: ஹாசினிக்கு நீதி கிடைத்தது எப்படி?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்