_102280888_img_2286

இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் இன்றுடன் 500ஆவது நாளை எட்டியுள்ளது.

Kilinochchi-yaalaruvi

இன்று 500ஆவது நாளினை முன்னிட்டு, இலங்கையின் வடக்கு கிழக்கை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலை இலங்கை அரசாங்கம் வெளியிடவேண்டும், ஐக்கிய நாடுகள் சபை எங்கள் பிள்ளைகளுடன் நாங்கள் வாழும் உரிமையை உறுதி செய்வேண்டும், ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச தலையீட்டுடனான நீதி பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும், சர்வதேச நாடுகள் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

???????????????????????????????

இந்த போராட்டத்தில் வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், மதகுருமார்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த காணமல் ஆக்கப்பட்டவரின் உறவினர் விஸ்வநாதன் பாலநந்தினி, “500 நாட்களை நெருங்கியும் வலிந்து காணமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை தேடி இந்த வீதியில் கண்ணீருடன் தொடர்ந்து போராடி வருகின்றோம். எம்மை யாருமே கண்டுகொள்ளவில்லை. குறிப்பாக அரசியல்வாதிகள் கூட எம்மை கண்டுகொள்ளவில்லை” என்றார்.

175048162b8843d285ed9bd0c8900504_6

தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்ட தமது உறவுகள் சிலர் பிரச்சனைகளை தீர்க்குமாறு சர்வதேச சமூகத்துக்கு அழுத்தங்களை கொடுத்துவருகின்றனர் என்று குறிப்பிட்ட அவர், “எமது போராட்டம் தொடங்கிய பின்னர் எழு தாய்மார்கள் உயிரிழந்துள்ளனர். தொடர் போராட்டத்தினால் பலர் நோய்வாய்பட்டுள்ளனர். இலங்கை அரசிடம் பலமுறை எமது கோரிக்கையை முன்வைத்தும் இதுவரை இலங்கை அரசாங்கம் எமக்கான தீர்வினை தரவில்லை” என்று தெரிவித்தார்.

???????????????????????????????

தொடர்ந்து இப்பந்தலில் அமர்ந்து போராட முடியாது என்றும் இனியாவது தங்களுக்கு நல்ல பதிலை இலங்கை அரசாங்கம் தரவேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.

Courtesy : bbc tamil

இதையும் படியுங்கள்

சென்னை ஐஐடியில் கேரளாவைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவி பாத்திமா லத்தீஃப்  கடந்த மாதம் விடுதி அறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். தனது தற்கொலைக்கு காரணம் ஐஐடியைச் சேர்ந்த சுதர்சன் பத்மநாபன் உள்ளிட்ட மூன்று பேராசிரியர்களும் காரணம் என தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக சென்னை...
ஐஐடி மாணவி மரணம் தொடர்பாக ஐஐடி இயக்குநருக்கும்  குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர்களுக்கும்  கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலை மிரட்டல் விடுத்து கடிதம் எழுதிய நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை ஐஐடியில் கேரளாவைச் சேர்ந்த...
தெலுங்கானாவில் பெண் கால்நடை மருத்துவரை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி எரித்துக்கொன்ற 4 பேரையும் போலீசார் வெள்ளிக்கிழமை என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர். இந்நிலையில், உயிரிழந்த 4 பேரின் உடலையும் வரும் திங்கள்கிழமை இரவு 8 மணி வரை பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என தெலுங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ஐதராபாத்தில்...
விஜயின் ‘தளபதி 64' திரைப்படத்தின்  சாட்டிலைட் உரிமையை சன் டிவி பெற்றுள்ளது. இதை    அடுத்து டிஜிட்டல் மற்றும் ஆடியோ உரிமைக்கான வியாபாரமும் பல கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வசூல் சாதனை படைத்தது பிகில். இதையடுத்து ‘தளபதி 64’ படத்தில் விஜய் தற்போது...
உபர் நிறுவனம், 2017-18 ஆம் ஆண்டுக‌ளில் உபர் கார் ஓட்டுநர்கள் மீது சுமார் 6‌ ஆயிரம்‌ பாலியல் புகார்கள் வந்து‌ள்ளதாக தெரிவித்துள்ளது. உலகம்‌ முழுவதும் 70 நாடுகளில் வாடகைக் கார்களை உபர் நிறுவனம் இயக்கி வருகின்றது. பல நாடுகளில் உபர் கார்களில் பயணிக்கும் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை...
மிங்-சி-கோ என்பவர் ஆப்பிள் நிறுவனத்தின் மொபைல்கள், ஐபேட் உள்ளிட்ட கருவிகளை ஆராய்ந்து அவை பற்றிய கணிப்பை முன்கூட்டியே தெரிவிப்பதில் வல்லவர். இவர்  அண்மையில் வெளியிட்ட கணிப்பின்படி இனி வரும் ஆண்டுகளில் ஆப்பிள் ஐபோன்கள் போர்ட்கள் எதுவுமின்று வெளிவரும் என்று கூறியுள்ளார்.   இரண்டே ஆண்டுகளில் இந்த தொழில்நுட்பத்தை ஆப்பிள் பின்பற்றவிருக்கிறது...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here