இந்தியா, பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை வழியில் பயணிப்பதுபோல் தெரிகிறது என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
இலங்கை பொருளாதாரத்தை முறையாக வழிநடத்தத் தவறியதால், கடுமையான பொருளாதார நெருக்கடி காரணத்தால், இலங்கை முழுவதும் அரசுக்கு எதிராக ஒரு மாதங்களுக்கு மேலாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், போராட்டக்காரர்கள் மீது அரசு ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதில் வன்முறை வெடித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள ஆளுங்கட்சியினரின் வீடுகளை மக்கள் சூறையாடி வருவதால், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து பிரதமராகப் பதவி வகித்து வந்த மகிந்த ராஜபட்ச ராஜிநாமா செய்ததையடுத்து, அதிபர் கோத்தபய ராஜபட்சவால் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், பொருளாதார சரிவு தொடர்பாக இலங்கையுடன் இந்தியாவை ஒப்பிடும் ஆறு கிராபிக்ஸ் வரைபடங்களை வெளியிட்டு
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பொருளாதார சரிவு தொடர்பாக, பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையுடன் இந்தியாவை ஒப்பிடும் ஆறு கிராபிக்ஸ் வரைபடங்களை வெளியிட்டு மத்திய அரசை விமர்சித்துள்ளார் ராகுல் காந்தி.
இது தொடர்பாக அவரது சுட்டுரை பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவிலும் இலங்கையிலும், வேலையில்லாத் திண்டாட்டம், எரிபொருள் விலை உயர்வு மற்றும் வகுப்புவாத வன்முறைகள் ஒரே மாதிரியாக உள்ளது என்றும், மக்களை திசை திருப்புவதன் மூலம் உண்மைகளை மாறாது. இந்தியா இலங்கை வழியில் பயணிப்பது போலவே தெரிகிறது என ராகுல் கூறியுள்ளார்.