இலங்கை நாடாளுமன்ற தேர்தல் : இன்று(ஆகஸ்ட் 06) வாக்கு எண்ணிக்கை

The election, conducted amidst COVID-19 pandemic fears, concluded in a peaceful manner on Wednesday, with a voter turnout of over 70 per cent, according to Chairman of the National Election Commission Mahinda Deshapriya.

0
143

இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடைய இருந்த சூழலில், நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு முன்கூட்டியே தேர்தலை நடத்த இருப்பதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்தார்.

அதாவது, அதிபர் கோத்தபய ராஜபக்சேவால் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 25 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 2 முறை ஒத்திவைக்கப்பட்ட இந்த தேர்தலை ஆகஸ்டு 5 ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பலத்த பாதுகாப்புடன் இலங்கையில் நேற்று(புதன்கிழமை) பொதுத்தேர்தல் நடந்து முடிந்தது. மொத்தமுள்ள 225 உறுப்பினர்களில் 196 உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக இந்தத் தேர்தல் நடந்தது.

இம்முறை முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே தலைமையிலான இலங்கை பொதுஜன பெரமுனா, ரணில்  விக்கிரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து வெளியேறிய சஜித் பிரேமதசாவின் ஐக்கிய மக்கள் சக்தி என மும்முனை போட்டி உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை தொடங்கியது. மக்கள் விறுவிறுப்பாக தங்கள் வாக்கினைப் பதிவு செய்தனர். மாலை 5 மணியுடன் நிறைவடைந்த நிலையில் 70 சதவீத வாக்குகள் பதிவாகின. 

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (வியாழக்கிழமை) எண்ணப்பட்டு மதியம் 2.30 அளவில் முதல் கட்ட முடிவுகள் வெளியாகும் என்றும் இறுதியான முடிவுகள் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாகும் என்றும் மகிந்த தேசபிரியா கூறினார்.

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு இலங்கையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here