இலங்கை ஜெயிலில் 8 கைதிகள் சுட்டுக்கொலை

Spokesman Ajith Rohana said elite police commandos were deployed at the Mahara prison where inmates rioted against overcrowded conditions and demanded their early release.

0
158

இலங்கை கொழும்பு நகரம் அருகே மகாரா என்ற இடத்தில் மத்திய சிறைச்சாலை உள்ளது. அங்கு இடவசதியை விட அதிகளவில் கைதிகள் இருந்தனர்.

கைதிகள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் கொரோனா தொற்று ஏற்படும் நிலை உருவானது. எனவே கைதிகளின் எண்ணிக்கையை குறைக்கவேண்டும். பல கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கைதிகள் கோரிக்கை விடுத்துவந்தனர்.

அதற்கு ஜெயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கைதிகள் கலவரத்தில் ஈடுபட்டனர். அவர்களை சிறைச்சாலையில் காவலர்கள் அடக்க முற்பட்டனர். அது கைதிகள் மற்றும் காவலர்கள் மோதலாக மாறியது.

கடுமையான வன்முறை நடந்தது. கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 8 கைதிகள் உயிரிழந்தனர். 24 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அதிகளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here