இலங்கை குண்டுவெடிப்பு: பல்வேறு ரக ஆயுதங்கள் சம்மாந்துறையில் மீட்பு

0
205

நேற்று(புதன்கிழமை) இலங்கையின் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறைபிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகை ஆயுதங்களை, ராணுவத்தினர்கைப்பற்றியுள்ளனர்.

ராணுவத்தினர் சம்மாந்துறை போலீஸ் பிரிவிற்குட்பட்ட மல்கம்பிட்டி – விளினையடி பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, இந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

புதைத்து வைப்பு

ஆயுதங்கள், உபயோகப்படுத்தாத காணியொன்றில் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

கடந்தஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகை அன்று இலங்கையின் முக்கிய தேவாலயங்கள் மற்றும்நட்சத்திர விடுதிகளில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் நூற்றுக் கணக்கானோர்பலியாகினர். அதனைத் தொடர்ந்து இலங்கையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் இலங்கை பிரதேசம் முழுவதும் ராணுவத்தினர் தீவிர தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

என்னென்ன பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன?

  • எம்.பி 25 ரக அமெரிக்க தயாரிப்பு மைக்ரோ கைத்துப்பாக்கி – 01
  • 9 எம் எம் கைத்துப்பாக்கி – 01
  • பென் துப்பாக்கிகள் – 02
  • ஷாட்கண் (Shot gun) துப்பாக்கி தோட்டாக்கள் – 08
  • ரி 56 ரக துப்பாக்கி ரவை கூடு – 01
  • தோட்டாக்கள் – 170
  • வயர் தொகுதி – 23
  • ஒவ்வொன்றும் 25 கிலோகிராம் எடைகொண்ட அமோனியம் நைட்ரேட் உரப்பைகள் – 04
  • ராணுவ மேலங்கி – 01
  • கைத்துப்பாக்கி தோட்டாக்கள்

போலீஸ் மோப்ப நாயின் உதவியுடன் கைப்பற்றப்பட்ட இந்தப் பொருட்கள் முழுவதுமே கிறீஸ் பூசப்பட்டு நிலத்தின் கீழ் புதைத்து வைக்கப்பட்டிருந்தன.

இதேவேளை இன்னும் ஒரு வீட்டிலிருந்து வாள் ஒன்றும், கல்குவாரி ஒன்றில் இருந்து 200 ஜெலட்டின் குச்சிகளும் மீட்கப்பட்டன.

இந்நிலையில், நேற்று போலீஸார், கடந்த 21ஆம் தேதி நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையதாக கூறப்படும் 9 தற்கொலை குண்டுதாரிகள் தொடர்பான தகவல்களை வெளியிட்டனர்.

கொழும்பு – கொச்சிக்கடை – புனித அந்தோனியார் தேவாலயத்தின் மீதே முதலாவது தாக்குதல் நடத்தப்பட்டது.

கொழும்பு- மட்டக்குளி பகுதியில் வசித்த அலாவூதீன் அஹமட் மூவாத் என்ற நபரால், கொச்சிக்கடைபுனித அந்தோனியார் தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக் கண்டறியப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, கொழும்பு ஷங்கிரிலா நட்சத்திர விடுதியின் மீது இரண்டு தற்கொலைகுண்டுதாரிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here