இலங்கையைச் சேர்ந்த ஒருவர் ராமேஷ்வரத்தில் கைது, இருவர் தப்பியோட்டம்

0
384

ராமேஷ்வரத்திலுள்ள உச்சிபுளி வலங்காபுரி கடற்கரைப் பகுதியில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் செவ்வாய்க்கிழமை (நேற்று) கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இருவர் அருகிலிருந்த வனப்பகுதிக்குள் தப்பித்துச் சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தலைமன்னாரைச் சேர்ந்த சகாய ச்டீஃபன் நேற்றிரவு சந்தேகத்திற்கிடமான வகையில் இருவருடன் கடற்கரைப் பகுதியில் நடமாடியதைத் தொடர்ந்து
கைது செய்யப்பட்டதாக க்யூ பிரிவு கண்காணிப்பாளர் என். ராஜேஷ்வரி கூறினார்.
மற்ற இருவர் அருகிலிருந்த வனப்பகுதிக்குள் தப்பித்துச் சென்றதாக கூறினார்.

மூவரும் தலைமன்னாரில் இருந்து கண்ணாடியிழைப் படகில் வந்துள்ளாதாகக் கூறினார். சுசுகி எஞ்சின் பொறுத்தப்பட்ட அப்படகினை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
எதற்காக அம்மூவரும் ராமேஷ்வரம் வந்தனர் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

முன்னதாக, ராமேஷ்வரத்தின் தங்கச்சிமடம் பகுதியில் 50 பெட்டிகளில் வெடிபொருட்கள், 41 மெல்லிய இயந்திர துப்பாக்கிகள், 22 இயந்திர துப்பாக்கிகள் மற்றும் 5 கண்ணிவெடிகள் திங்கட்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

செப்டிக் டேங்க் அமைக்க குழி தோண்டிய போது வீட்டாருக்கு வெடிபொருட்கள் கிடைத்ததைத் தொடர்ந்து காவல்துறையினர்
வரவழைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here