இலங்கையில் போர்க்குற்ற விசாரணை நடைபெறுமா?

Sri Lanka's prime minister said Wednesday that the government has decided to withdraw from co-sponsorship of a 2015 U.N. Human Rights Council resolution calling for the investigation of allegations of war crimes committed during the island nation's long civil war.

0
179

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஷவேந்திர சில்வா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதற்கான உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்து அமெரிக்கா கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராணுவ தளபதி ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தங்கள் நாட்டிற்குள் நுழைய அமெரிக்கா தடை விதித்தது.

இதற்கு, இலங்கை அரசிற்கு ஆலோசனைகள் வழங்கும் பவுத்த மத அமைப்பு கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட,30/1 மற்றும் 40/1 தீர்மானங்களிலிருந்து விலகுவதாக, இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே கடந்த 19 ஆம் தேதி அறிவித்தார்.

மேலும்,’2015 ஆம் ஆண்டு ஐ.நா., சபையின் மனித உரிமை பேரவையில், இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு, அப்போதைய இலங்கை அரசு உடன்பட்டது நாட்டைக் காட்டிக் கொடுக்கும் செயல்’ என, ராஜபக்சே தெரிவித்தார்.

போர்க்குற்றங்கள் குறித்து விசாரணைகள் மேற்கொள்வதாகவும், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வழங்குவதாகவும் இலங்கை அரசு ஒப்புக்கொண்டதற்கான நம்பிக்கையே ஐ.நா., தீர்மானங்கள். தற்போது அவற்றில் இருந்து விலகுவதாக இலங்கை அறிவித்துள்ளதால், போர்க்குற்றங்கள் தொடர்பான நீதி விசாரணை நடக்குமா என்ற கேள்வி இலங்கைத் தமிழர்களிடத்தில் எழுந்துள்ளது.

இந்நிலையில், ”ஐ.நா., மனித உரிமைகள் சபையில், 47நாடுகளால் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களிலிருந்து இலங்கை அரசு விலகுவதால் அனைத்து நாடுகளும் இலங்கையை எதிர்க்கும். இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகள் மீதான அழுத்தங்கள் அதிகரிக்கும். இதனால், தமிழர்களுக்கு நீதி கிடைக்கும்’ என, இலங்கைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

ஐ.நா., மீது மட்டுமே தங்களது இறுதி நம்பிக்கையை வைத்துள்ள இலங்கைத் தமிழர்களுக்கு, ஐ.நா., நீதியை விரைந்து பெற்றுத் தர வேண்டும் என்பதே அவர்களது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here