இலங்கை – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடந்து வருகிறது.

இதில் முதல் இன்னிங்சில் முறையே இலங்கை 338 ரன்களும், 2-வது இன்னிங்சில் இலங்கை அணி 81 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது.

கருணாரத்னே 85 ரன்களும், மேத்யூஸ் 71 ரன்களும் எடுத்தனர். தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 124 ரன்கள் எடுத்த்து.

முதல் இன்னிங்ஸ் முன்னிலையையும் சேர்த்து இலங்கை அணி தென்ஆப்பிரிக்காவுக்கு 490 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

DinA-3hXcAE8S5E

2-வது இன்னிங்சில் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர்கள் ஹெராத், தில்ருவான் பெரேரா, அகிலா தனஞ்ஜெயா ஆகியோரின் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறி வருகிறது.

3-வது நாள் ஆட்ட நேர முடிவில் தென்ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் 41 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 139 ரன்களை எடுத்து தோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. டி புருன் (45 ரன், 97 பந்து), பவுமா (14 ரன்) களத்தில் உள்ளனர்.

இலங்கை தரப்பில் ஹெராத், தனஞ்ஜெயா தலா 2 விக்கெட்டுகளும், பெரேரா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

தென்ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு இன்னும் 351 ரன்கள் தேவைப்படுகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்