ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது.
டெஸ்ட் தொடரில், முதல் டெஸ்டை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்தது.
3-வது டெஸ்ட் சிட்னியில் நடைபெற்றது. 407 வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 131 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் எடுத்தது. இதனால் சிட்னி டெஸ்ட் டிரா ஆகியுள்ளது.
வெற்றியை தீர்மானிக்கும் 4-வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி பிரிஸ்பென் மைதானத்தில் வரும் 15 ஆம் தேதி நடைபெறஉள்ளது.
இதற்கிடையில், சிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியின் போது இந்திய வீரர்கள் பலருக்கும் காயம் ஏற்பட்டது. இதனால், ஏற்கனவே ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள் 4-வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளனர்.
இந்நிலையில், 3-வது டெஸ்ட்போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய வீரர்கள் ஹனுமா விஹாரி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரும் விலகியுள்ளனர்.
3-வதுநாளன்று ஆஸ்திரேலிய அணியின் 2-வதுஇன்னிங்ஸில் பும்ராவுக்கு வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. எனினும் 25 ஓவர்களை வீசினார். காயம் காரணமாக பும்ராவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நேற்று பேட்டிங் செய்தபோது விஹாரிக்கு காயம் ஏற்பட்டது.
தையடுத்து, ஹனுமா விஹாரி மற்றும் பும்ரா ஆகிய இரு வீரர்களும் பிரிஸ்பென்னில் நடைபெற உள்ள 4-வது டெஸ்ட்போட்டியில் இருந்து விலகியுள்ளனர்.
பும்ராவால் விளையாட முடியாமல் போனால் ஷர்துல்தாக்குர், நடராஜன் ஆகிய இருவரில் ஒருவர் பிரிஸ்பேன் டெஸ்டுக்குத் தேர்வு செய்யப்படுவார்.