அட்டகாசமான இறால் தொக்கு ரெசிபி இதை எப்படி சுலபமாகவும் சுவையாகவும் உங்கள் வீட்டில் சமைப்பது என்பதை பார்க்கலாம். 

தேவையானவை: 

இறால் (சுத்தம் செய்து குடல் நீக்கியது) – 250 கிராம்,

பெரிய வெங்காயம் – 100 கிராம்,

தக்காளி – 100 கிராம்,

இஞ்சி-பூண்டு விழுது – ஒன்றரை டீஸ்பூன்,

மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,

மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,

சோம்பு – அரை டீஸ்பூன்,

பச்சை மிளகாய் – 2,

கறிவேப்பிலை – சிறிதளவு,

நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு,

கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்,

எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்,

உப்பு – தேவையான அளவு

 செய்முறை: 

பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை தனித்தனியாக பொடியாக நறுக்கிக்கொள்ளவும். அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும், சோம்பு சேர்க்கவும். சோம்பு நன்றாக பொரிந்ததும் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். 

பின்பு இஞ்சி-பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை நீங்கும்வரை வதக்கவும். கறிவேப்பிலை, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கிளறவும். பின் தக்காளியைச் சேர்த்து நன்றாக வதக்கவும். 

தேவையான அளவு உப்பு, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து மசாலாவை நன்கு வதக்கி, அதனுடன் சுத்தம் செய்த இறாலைச் சேர்த்துக் கிளறி வேகவிடவும். சிறிது நேரத்தில் இறால் வெந்ததும் கரம் மசாலாத்தூள் மற்றும் நறுக்கிய கொத்துமல்லித்தழை சேர்த்து நன்றாகக் கிளறிய பின் இறக்கவும். 

சாதத்துடன் சூடாக இறால் தொக்கை பறிமாற அட்டகாசமான காம்பினேஷாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here