இரு மாத மின் கட்டணம் 3.71கோடி

Superintending engineer Girish Joshi said the operator who records meter readings mistakenly keyed in meter number in the column for reading.

0
123

ராஜஸ்தானில் விவசாயிக்கு சொந்தமான கடைக்கு இரு மாத மின் கட்டணமாக 3.71கோடி ரூபாய் செலுத்தும்படி ரசீது அனுப்பி வைக்கப்பட்டது.

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர்மாவட்டம் கிங்லா கிராமத்தை சேர்ந்தவர் பெமரம் படேல் 22. விவசாயம் செய்து வரும் இவர் தனக்கு சொந்தமான கடையை வாடகைக்கு விட்டுள்ளார்.

அதில் ஒருவர் வாகனங்களை பழுது நீக்கும் மையம் நடத்தி வருகிறார்.

அவருக்கு மின்கட்டணத்துக்கான ரசீது ஆகஸ்ட் 22 ஆம் தேதி அவருக்கு அனுப்பபட்டது.  பணம் செலுத்த வேண்டிய கடைசி தேதி செப்டம்பர் 3 ஆகும்.

இந்தகடையில் கடந்த இரு மாதங்களில் மூன்று கோடியே 85 லட்சத்து14 ஆயிரத்து 098 ‘யூனிட்’ மின்சாரம்பயன்படுத்தியதாக கூறி 3.71 கோடி ரூபாய் கட்டணம் செலுத்தும்படி மின்சார அலுவலகம் சார்பில் பில் அனுப்பி வைக்கப்பட்டது. அதில் இருந்த தொகையைப் பார்த்து பெமரம் படேல் அதிர்ச்சி அடைந்தார். அந்த ரசீதுடன் அருகிலுள்ள இ-மித்ரா மையமான ராஜஸ்தான்அரசு மின்-நிர்வாக மையங்களுக்கு ஓடினார்

அப்போது கணக்கீட்டாளரின் தவறால் இதுபோல் நடந்துள்ளதாக கூறிய அதிகாரிகள் முறையான மின் பயன்பாட்டினை கணக்கிட்டு 6414 ரூபாய் செலுத்தும்படி கூறினர். 

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here