இரு மாதங்களில் விற்பனையில் சாதனை படைத்த கார்

Hyundai has launched the 2020 model Creta in India at Rs 9.99 lakh (ex-showroom). It has three new BS6 engine options and premium features such as a Bose audio system and a panoramic sunroof.

0
162

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஆட்டோமொபைல் துறை முற்றிலும் முடங்கியது.

அதன் பின்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கடந்த மே மாதத்தில் ஆட்டோமொபைல் விற்பனையும் ஆரம்பிக்கப்பட்டது. இதனையடுத்து விற்பனை துவங்கிய ஹூண்டாய் நிறுவனம், மே மாதத்தில் மட்டும், அதன் கிரெட்டா மாடல் காரை 3121 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.இது மே மாதத்தில் மற்ற நிறுவனங்களின் எஸ்யுவி விற்பனையை விட அதிகம் ஆகும்.

அதே நேரம் கிரெட்டா மாடலுக்கு போட்டியாளரான கியா செல்டோஸ் மே மாதத்தில் 1611 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. இந்நிலையில், ஜூன் மாத விற்பனையிலும் ஹூண்டாய் கிரெட்டா 7202 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இதனால் ஜூன் மாதத்தில் இந்திய சந்தையில் அதிகம் விற்பனையான எஸ்யுவி மாடலாக கிரெட்டா இருக்கிறது.

hyundai-creta-right-front-three-quarter9

இதே காலக்கட்டத்தில் கியா செல்டோஸ் 7114 யூனிட்கள் விற்பனையாகி இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அதிக விற்பனை அடிப்படையில் இரண்டாவது இடத்தில் இருந்தபோதும், கியா செல்டோஸ் விற்பனை 342 சதவீதம் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here