இருளில் மூழ்கிய இங்கிலாந்து நகரங்கள் : லட்சக்கணக்கான மக்கள் அவதி

0
95

மின் தடையால் இங்கிலாந்து நகரங்கள் இருளில் மூழ்கியதால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

இங்கிலாந்தின் பெரும்பாலான  பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் மிட்லண்ட்ஸ், தென் கிழக்கு, தென்மேற்கு, வடகிழக்கு பகுதிகள் மற்றும் வேல்ஸ் பகுதிகள் மின் தடையால் இருளில் மூழ்கின.  இதனால் பல இலட்சக்கணக்கான பொதுமக்கள் கடும்  அவதிக்குள்ளாகினர்.  

பல பகுதிகளில் ரயில் சேவை தாமதம் ஆனது. சில இடங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளது. லண்டனில் ரயில் நிலையங்கள் இருளில் மூழ்கியது. ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், கிங்க் கிராஸ் ரயில் நிலையத்தில்  நுற்றுக்கணக்கான மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். டிராபிக் லைட்கள்  சாலைகளில் சில இடங்களில்  செயல் இழந்ததால், போக்குவரத்து ஸ்தம்பித்தது. 

இந்த திடீர் மின் தடையால் போக்குவரத்து மற்றும் குடியிருப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இரண்டு மின் ஜெனரேட்டர்களில் பிரச்னை ஏற்பட்டதாக கூறும் தேசிய கிரிட் (National Grid), உடனடியாக அது சீரமைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.