அமெரிக்கா சில தசாப்தங்களாக நடைமுறையில் இருக்கும் அமைதி ஒப்பந்தத்தை கைவிடபோவதாக அறிவித்திருக்கிறது.
சர்வதேச நீதிமன்றத்தில் வியன்னா அமைதி ஒப்பந்தத்தை காரணம் காட்டி இரான் ஓர் வழக்கை நடத்திவந்த நிலையில் இவ்வொப்பந்தத்தை அமெரிக்கா கைவிடும் என பாதுகாப்பு செயலர் மைக் பாம்பியோ கூறியுள்ளார்.
கடந்த மே மாதம் இரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வதாக கூறி ட்ரம்ப் நிர்வாகம் இரான் மீது மீண்டும் பொருளாதார தடைகளை விதித்தது.
அமெரிக்காவின் இம்முடிவானது 1955-ம் ஆண்டு ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்துக்கு பங்கம் விளைவிப்பதாக இரான் வாதிட்டது.
இதையடுத்து, அமெரிக்கா இரானுக்கு விதித்த தடைகளை நீக்க வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் கடந்த புதன்கிழமை தீர்ப்பளித்ததற்கு பிறகு, அமைதி ஒப்பந்தத்தையே முறித்துக்கொள்ளப்போவதாக மைக் பாம்பியோ அறிவித்திருக்கிறார்.
”வெளிப்படையாக சொல்லவேண்டுமானால் 39 வருடங்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த முடிவு இது” என பாம்பியோ தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜான் பால்டன் ” அமெரிக்காவை சர்வதேச நீதிமன்றத்தில் அம்பலப்படுத்தும் அத்தனை ஒப்பந்தங்களும் மறு ஆய்வு செய்யப்படும்” என்றார்.
சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை இவ்விருவரும் ”அடிப்படையற்ற ஒன்று” எனக் கூறி நிராகரித்தனர்.
அமெரிக்க பாதுகாப்பு செயலர் மைக் பாம்பியோ
உணவு, மருந்து மற்றும் வான்வழி பயண பாதுகாப்பு கருவிகள் உள்ளிட்ட மனிதாபிமான பொருள்களை இரான் ஏற்றுமதி செய்வதற்கு எவ்வித இடையூறுகள் விதித்திருந்தாலும் அவற்றை அமெரிக்கா நீக்க வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பளித்திருந்தனர்.
அமெரிக்கா கால தாமதமின்றி இரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை முழுமையாக நீக்க உத்தரவிடவேண்டும் என இரான் கூறியதை நீதிமன்றம் நிராகரித்தது.
சர்வதேச நீதிமன்றம் இத்தகைய உத்தரவுகளை பிறப்பித்தாலும் அவற்றை அமெரிக்கா செயல்படுத்த வற்புறுத்துவதற்கு எவ்வித அதிகாரங்களும் இல்லை.
ஐநாவின் பிரதான நீதிமன்ற அமைப்பாக சர்வதேச நீதிமன்றம் செயல்படுகிறது. ஐநா உறுப்பு நாடுகளுக்கு இடையே ஏற்படும் சட்டப்பூர்வமான சச்சரவுகளை நீக்குவது இதன் பணி. ஆனால் இரு நாடுகளுமே இந்நீதிமன்றத்தின் முந்தைய கால தீர்ப்புகளை மதிக்கவில்லை.
இரானுடன் சில தசாப்தகால நட்பு ரீதியிலான அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்கா முறித்துக்கொள்வதன் மூலம் மிகப்பெரிய ஒரு குறியீடு மூலம் தனது எண்ணத்தை அமெரிக்கா குறிப்புணர்த்தியிருக்கிறது.
சர்வதேச நீதிமன்ற முடிவுகளை நிராகரிப்பது முன்னெப்போதும் நடக்காத ஒன்றல்ல.
சர்வதேச சட்டங்களை அமெரிக்கா மதிக்காமல் மீறியது வரலாறு. சர்வதேச சட்ட அமைப்புகள் அமெரிக்காவின் விருப்பங்களுக்கு எதிராக எடுத்த முடிவுகளுக்கு எதிர்மறையாக வினையாற்றுவது அமெரிக்காவுக்கு புதிதல்ல.
சர்வதேச நீதிமன்றத்துடன் அமெரிக்காவுக்கு நல்ல உறவு இல்லை மேலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலும் அமெரிக்கா சேர்வதில்லை.
ஆனால் ட்ரம்ப் நிர்வாகம் இதை இன்னொரு படி மேலே எடுத்துச்செல்கிறது. தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜான் பால்டன் முன்னின்று இவற்றை நடத்துகிறார். உலகமயமாக்கல் அமெரிக்காவின் இறையாண்மையை கட்டுப்படுத்துவதாக அவர் நீண்டகாலமாக வாதிட்டு வருகிறார். தற்போது அதிபர் ட்ரம்பின் விருப்பங்களுக்கு அவர் வடிவம் கொடுத்து வருகிறார். ஐநா உறுப்பு மைப்புகளுடன் மற்றும் சர்வதேச நீதிமன்றம் போன்ற சர்வதேச நிறுவனங்களுடனான உறவு மீதான இடைவெளியை அதிகரிப்பது அல்லது முறித்துக்கொள்வதற்கான வேலைகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
news 2.003

நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
இரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பொருளியல் சார்ந்த உறவுகள் மற்றும் தூதரக உரிமைகள், அமைதி ஒப்பந்தம் ஆகியவற்றை மீறுவதாக இந்த தடைகள் இருக்கின்றன என இரான் தெரிவித்துள்ளது.
வணிக உறவுகளை ஒழுங்குபடுத்தும் அமைதிக்கான ஒப்பந்தமானது 1955-ல் கையெழுத்தானது.
அதிபர் ட்ரம்ப் மீண்டும் பொருளாதார தடைகளை விதித்திருப்பதற்கான காரணங்கள் முழுமையாக கண்டறியப்படவில்லை. ஏனெனில் சர்வதேச அணுசக்தி கண்காணிப்பகமானது அணுசக்தி உடன்படிக்கை விதிமுறைகளை இரான் முறையாக கடைபிடித்து வருவதை உறுதி செய்திருக்கின்றன என நீதிமன்றத்தில் இரான் கூறியது.
இரான் கோரும் விஷயங்கள் அமைதி ஒப்பந்தத்துக்கு வெளியே இருக்கக்கூடியது. ஆகவே, இதில் சர்வதேச நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பு வழங்க அதிகார வரம்பு இல்லை என அமெரிக்க வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

news 2.004
சரி, அமெரிக்கா அணுசக்தி உடன்படிக்கையை முறித்துக்கொண்டதேன்?
கடந்த 2015-ம் ஆண்டு இஸ்லாமிய குடியரசு நாடான இரான் சர்வதேச தடைகள் நீக்கப்பட்டு நிவாரணம் பெறுவதற்காக சர்ச்சைக்குரிய அணுசக்தி செயல்பாடுகளில் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க ஒப்புக்கொண்டது.
ஆனால் ட்ரம்ப் நிர்வாகமானது ” இரான் அணுகுண்டு தயாரிப்பதற்கான அனைத்து வழிகளையும் மூடுவதற்கான அடிப்படை குறிக்கோள்களை நிறைவேற்ற தவறிவிட்டது” என கூறி யது.
டெஹ்ரானின் பெலிஸ்டிக் ஏவுகணை திட்டம் மற்றும் பயங்கரவாதத்துக்கான அதன் ஆதரவு உள்ளிட்ட தீய செயல்களுக்கு அமெரிக்கா ஒப்பந்தத்தின் பேரில் ஒத்துப்போகாது என்றது.

இரானை ஒப்பந்தத்தை முழுமையாக பின்பற்றவைக்க வலியுறுத்துவதற்கான முயற்சியின் ஒருபகுதியாக அமெரிக்க அதிபர் மீண்டும் பொருளாதார தடைகளை விதித்தார். இதன் மூலம் இரான் அமெரிக்க டாலர்களை வாங்குவதில் கட்டுப்பாடு விதிப்பது, தங்கம் மற்றும் விலையுயர்ந்த உலோக வர்த்தகம் மற்றும் வாகன துறையில் வர்த்தகத்தில் ஈடுபடுவதில் சிக்கலை ஏற்படுத்தும் விதமாக இத்தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
வரும் நவம்பர் மாதம், மேற்கொண்டு இரண்டாவது கட்ட தடைகளை அமெரிக்கா நடைமுறைக்கு கொண்டுவரவரவுள்ளது. இரானின் எண்ணெய் மற்றும் கப்பல் துறை, அதன் மத்திய வங்கி உள்ளிட்டவற்றில் சிக்கல்களை ஏற்படுத்தும் விதமாக இரண்டாவது கட்ட தடைகள் அமையும்.
உடன்படிக்கையை முழுமையாக செயல்படுத்த இரான் தனது கடமைகளை முழுமையாக நிறைவேற்றுமாறு இவ்வுடன்படிக்கையில் உள்ள மற்ற நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்டவை வலியுறுத்தியுள்ளன.

courtesy: Bbc

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here