ஈராக்கில் அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது ராக்கெட் தாக்குதல்

0
192

ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது 8 ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஈராக் தலைநகா் பாக்தாத்தின் வட பகுதியில் அல் பலாத் என்ற இடத்தில் அமெரிக்க விமானப்படையினர் தங்கியுள்ள முகாம்களில் ராக்கெட் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக ஈராக் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இதில் சில உள்ளூர் அதிகாரிகள் நால்வர் காயமடைந்ததாகவும் ஈராக் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. எனினும் ஈராக்கிலுள்ள ஈரான் ஆதரவு படையினர் இதன் பின்னணியில் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இது தொடா்பாக ஈராக் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில்,‘பாக்தாதின் வடக்குப் பகுதியில் உள்ள அல்-பலாத் விமானபடைத் தளத்தில் ‘கத்யுஷா’ ரகத்தைச் சோ்ந்த 8 ராக்கெட்டுகளைக் கொண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் விமானப் படை அதிகாரிகள் இருவா்,விமானிகள் இருவா் என 4 போ் காயமடைந்தனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈராக் ராணுவ வட்டாரங்கள் கூறுகையில், ‘கடந்த இரு வாரங்களாக அமெரிக்கா-ஈரான் இடையே பதற்றம் அதிகரித்த சூழலில், அல்-பலாத் விமானப் படைதளத்தில் இருந்த பெரும்பாலான அமெரிக்க விமானப்படையினா், அந்நாட்டு ஒப்பந்ததாரா்கள்,ஆலோசகா்கள் உள்ளிட்டோா் ஏற்கெனவேபாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டுவிட்டனா். 15 அமெரிக்க வீரா்கள்மட்டுமே தற்போதுஅல்-பலாத்விமானப் படைதளத்தில் உள்ளனா்.அவா்களுக்கான ஒருவிமானம் மட்டும்அங்கு உள்ளது’என்றன.

ஈரான் முக்கியபடைத் தலைவா் காசிம் சுலைமானி அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதையடுத்து, அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஈராக்கில் உள்ளஇரு இடங்களில் அமெரிக்கராணுவ நிலைகளை குறிவைத்து இதேபோன்ற தாக்குதலை சமீபத்தில் ஈரான் நடத்தியிருந்தது. இந்நிலையில், தற்போது மேலும் ஒருவிமானப் படைதளத்தில் அமெரிக்க படைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் உக்ரைன் விமானத்தை ஈரான் ராணுவத்தினர் தவறுதலாக சுட்டுவீழ்த்திய நிலையில், அவர்களுக்கு எதிராக உள்நாட்டிலேயே போராட்டங்கள் வெடித்துள்ளன.

போராட்டம் நடத்துபவர்களை கொன்று விடாதீர்கள் என்றும் உலகம் உங்களை உற்று கவனித்து வருகிறது என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here