ஒடிசாவில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (டிச. 31) நள்ளிரவு 1 மணி வரை மதுக்கடைகளைத் திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநில மது விற்பனைத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

புவனேசுவரம், கட்டாக் மற்றும் புரி ஆகிய நகரங்களில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு டிச. 31 ஆம் தேதி நள்ளிரவு 1 மணி வரை இந்தியத் தயாரிப்பு அன்னிய வகை மதுபானங்களை விற்பனை செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. எனவே மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் நள்ளிரவு 1 மணி வரை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா மாநில அரசின்2008 ஆம் ஆண்டு மதுவிற்பனை விதி எண் 93-ன் அடிப்படையில், பொதுமக்களின் விருப்பத்திற்காக மதுக்கடைகளைத் திறந்து வைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here