ராகி மற்றும் ஓட்ஸ் இரண்டிலும் உடலுக்கு தேவையான கார்போஹைட்ரேட் இருக்கிறது. 

ராகி, ஓட்ஸ்  ஊத்தாப்பம் செய்ய தேவையான பொருட்களை பார்ப்போம். 

தேவையானவை:

ஓட்ஸ் – 1 கப்

ராகி மாவு – 1 கப்

சிவப்பு அரிசி – 1 கப்

உளுந்து – ½ கப்

வெங்காயம் – 1

தக்காளி – 1

குடைமிளகாய் – 1

பச்சை மிளகாய் – 1

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

சிவப்பு அரிசி, ஓட்ஸ் மற்றும் உளுந்து ஆகிய மூன்றையும் 4-5 மணி நேரம் ஊறவைத்து அரைத்து கொள்ளவும்.  அத்துடன் ராகி மாவு சேர்த்து கலந்து கொள்ளவும்.  அதில் உப்பு சேர்த்து ஒரு மணி நேரம் அப்படியே வைத்திருக்கும்.

வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும். 

அடுப்பில் தவா வைத்து அதில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து கொள்ளவும். 

அதில் கலந்து வைத்த மாவை ஊற்றி அதில் நறுக்கி வைத்த காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைக்கவும்.  மூடி வைத்து வேக வைத்தால் ஊத்தாப்பம் சுவையாக இருக்கும். 

நன்கு வெந்தபின் இரண்டு பக்கமும் திருப்பி போட்டு வேக வைக்கவும். 

Courtesy: NDTV

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here