ஆரோக்கியமான உணவும் வாழ்க்கை முறையும் மட்டுமே இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்.

இன்றைய காலத்தில் ஹைபர்டென்சன் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகிய நோய்கள்தான் மிக முக்கியமான நோய்களாகப் பார்க்கப்படுகிறது. உயர் இரத்த அழுத்தம் இதய நோய்கள் மற்றும் சிறுநீரகப் பிரச்னைகளை உருவாக்கும். உயர் இரத்த அழுத்தம் சில காரணங்கள் உண்டு. உடல் உழைப்பு இல்லா வாழ்க்கை முறை, குடிப்பழக்கம், புகைப்பிடித்தல் ஆகியவை காரணங்களாக அமையலாம். இரத்த அழுத்தம் மிகவும் ஆபத்தானது. இதை சைலண்ட் கிள்ளர் என்றே இதை அழைக்கலாம். ஆரோக்கியமான உணவும் வாழ்க்கை முறையும் மட்டுமே இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்.

முன்பே குறிப்பிட்டது போல் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க சீரான உணவு முறை மிகவும் அவசியம். இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் மூன்று ஊட்டச் சத்துகள் கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவையாகும். இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த மூன்று ஊட்டச்சத்துகள் இருக்கும் வகையில் உணவினை எடுத்துக் கொள்வது அவசியம். 

ஊட்டச்சத்து நிபுணர் ரூபலி தத்தா, “பொட்டாசியம், தசையின் முறையான செயல்பட்டு மிகவும் அவசியம். இரத்தக் குழாயின் சுவர்களை ரிலாக்ஸ் செய்து பிபி-ஐ கட்டுப்படுத்துகிறது. ஒழுங்கற்ற இதயத் துடிப்பை தடுக்க மிகவும் உதவுகிறது” என்று கூறினார். பொட்டாசியம் அதிகமுள்ள ஆரஞ்சு, காளான்கள், கீரை வகைகள், ப்ரோக்கோலி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, உருளைக் கிழங்கு, வாழைப்பழம் மற்றும் ஆப்ரிக்காட்ஸ், ஆகியவற்றில் உள்ளது. 

மக்னீசியம் உடலின் செயல்பாட்டை முறைப்படுத்துகிறது. இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. தசை மற்றும் நரம்புகளின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. மனித உடலின் சக்தியை உருவாக்கவும் எலும்புகளின் வளர்ச்சிக்கும் மக்னீசியம் மிகவும் அவசியம். மக்னீசியம் அதிகம் உள்ள உணவு வகைகள்  வாழைப்பழம், வெண்ணெய், கேல், நட்ஸ், கொண்டைக்கடலை, கருப்பு பீன்ஸ் ஆகியவற்றில் உள்ளது. 

கால்சியம் குறைபாடு உள்ளவர்களுக்கும்  ஹைபர்டென்சன் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். கால்சியம் நம்மை சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது. ஹார்மோன்கள் மற்றும் என்சைம்களின் வெளியீட்டிற்கு மிகவும் அவசியம். கால்சியம் அதிகமுள்ள உணவு பொருட்கள் பால் பொருட்களான, பால், தயிர், சீஸ்,பருப்பு வகைகள், மீன்கள் மற்றும் கீரை வகைகள். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here