ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, உடல் பருமன், மருந்துகளின் பக்கவிளைவு போன்றவற்றால் இரத்தக் குழாய்களில் அடைப்போ அல்லது கொழுப்பு போன்றவை சேர்ந்து இதயத்திற்கு செல்லும் இரத்தத்தில் பாதிப்பை ஏற்படுத்திவிடும். எனவே, இரத்தக் குழாய்களில் இருக்கும் அடைப்பை இயற்கையான முறையில் போக்குவதற்கும், இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இங்கே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியமுறை மிகவும் உதவிகரமாக இருக்கும்.

தேவையானப் பொருட்கள்:

பசலைக் கீரை ஜூஸ் – 1/2 டம்ளர்
வறுத்த ஆளி விதை(Flax seeds) – 1 டேபிள் ஸ்பூன்.

flax-seed-benefits

ஜூஸ் செய்முறை:

ஒரு டம்ளர் பசலைக் கீரையுடன் குறிப்பிட்ட அளவு ஆளி விதை சேர்க்க வேண்டும். நன்கு கலக்கி கொள்ளுங்கள். இந்த ஜூஸை தினமும் காலை உணவிற்கு பின் குறைந்தது 2 மாதத்திற்கு குடிக்கவேண்டும்.

கொழுப்பை கரைக்கும்:

இந்த ஜூஸை தினமும் குடித்து வரும் போது இயற்கையான முறையில் இதய இரத்தக் குழாயிகளை சுத்தம் செய்து, இதயத்தை எப்பொழுதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். இந்த ஜூஸை குடிக்கும் நீங்கள் கண்டிப்பாக கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள், எண்ணெய் பலகாரங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டியது அவசியம். மேலும், தினமும் உடற்பயிற்சி செய்வது உடல் பருமன் அதிகரிக்காமல் தடுத்து உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here