ஜிஎஸ்டி புலனாய்வு பிரிவு கடந்த இரண்டு மாதங்களில் ரூ. 2000 கோடி வரை வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக கண்டுபிடித்துள்ளது. 1.11 கோடி பதிவு செய்யப்பட்ட வணிகங்களில் வெறும் 1 சதவீத வணிக நிறுவனங்கள்தான், 80 சதவீதம் வரிகள் கட்டுவதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறுதொழில் முனைவோர்களைப் போல பெருநிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களும் கூட ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்வதில் தவறுகள் செய்வதாக மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியத்தின் உறுப்பினர் ஜான் ஜோசஃப் கூறினார்.
வரிகள் கட்டப்பட்ட முறையை பார்த்தீர்களானால் அதிர்ச்சிகரமாக உள்ளது. ஒரு கோடி தொழில்களுக்கும் மேல் பதிவு செய்யப்பட்டுள்ளது. “ஆனால் வரி எங்கிருந்து வருகிறது என்று பார்த்தீர்களானால், ஒரு லட்சத்துக்கும் குறைவான பேர் தான் 80 சதவீத வரியை கட்டுகிறார்கள். அமைப்பில் என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை. இதனை ஆய்வு செய்யவேண்டியது அவசியம்,” என்றார் அசோசாம் (Assocham) நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்ள வந்த ஜோசஃப்.

சரக்கு மற்றும் சேவை வரி புலனாய்வு அமைப்பின் தலைமை இயக்குனராகவும் உள்ள ஜோசஃப், காம்போஸிஷன் டீலர்களுடைய
தரவுகளை ஆராய்ந்தால் அவர்களில் பெரும்பாலானவர்களின் ஆண்டு வருமானம் 5 லட்சம் இருப்பதாகத் தெரிகிறது என்கிறார். “மேலும் இணக்கம் தேவை என்பது இதிலிருந்து தெரிகிறது.” காம்போஸிஷன் திட்டத்தின் கீழ், வணிகர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் 1 சதவிதம் குறைவான வரி கட்டவேண்டும். உணவக உறிமையாளர்கள் 5 சதவீதம் வரி கட்டவேண்டும். ரூ. 1.5 கோடி ரூபாய்க்கும் குறைவான ஆண்டு வருமானம் உள்ள உற்பத்தியாளர்கள், உணவகங்கள் மற்றும் வணிகர்கள்
இத்திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ளலாம்.

விநியோகிக்கப்படாத சரக்குகளுக்கு போலியான விலைச்சீட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக புலனாய்வில் தெரியவந்துள்ளது என ஜோசஃப் கூறினார். இந்த விலைச்சீட்டின் அடிப்படையில் சில நிறுவனங்கள் உள்ளீட்டு வரிக் கடன் கோருகின்றனர். சிலர் இதன் அடிப்படையில் ஜிஎஸ்டி ரீஃபண்ட் கோருகின்றனர்.
”அரசாங்க வருமானம் பறிக்கப்படுகிறது. 1-2 மாதங்களிலேயே ரூ. 2000 கோடி வரை வரி ஏய்ப்பு நடந்துள்ளது ஒரு சிறிய எடுத்துக்காட்டு தான்,” என்ற ஜோசஃப், ஜிஎஸ்டி புலனாய்வு பிரிவு வரும் நாட்களில் தனது முயற்சிகளை
அதிகரிக்கும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here