உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகளில், மூன்றாவது சுற்றில் உலகின் எட்டாம் நிலை வீராங்கனையான சாய்னா நேவால் டென்மார்க்கின் மியாவிடம் தோல்வியுற்றார்.

இந்நிலையில், 21-15, 25-27, 12-21 என்ற கணக்கில் தோல்வியுற்றதற்கு நடுவர்களின் முடிவே காரணம் என்று கூறியுள்ளார். மேலும், சாய்னா தனது டிவிட் பதிவின் மூலம் அதிருப்தியை வெளிப்படுத்தினார். 

“இன்னும் அந்த இரண்டு புள்ளிகளை நடுவர்கள் தவறாக அளித்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. போட்டிக்கு நடுவே பேசிய நடுவர்கள் அம்பயரின் வேலையில் தலையிடாதீர்கள் என்றனர். ஆனால் நடுவர்கள் போட்டியில் அதிகப்படியாக செயல்படுவது வேதனையளிக்கிறது” என்றார்.

இதற்கு சாய்னாவின் கணவர் காஷ்யப் டிவிட்டரில் தனது வருத்தத்தை பதிவிட்டுள்ளார். இரண்டு புள்ளிகளை நடுவர்கள் வழங்கத் தவறியது வருத்தமளிக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், நிறைய நடுவர்களின் தவறுகள் இடம்பெறுகின்றன. உலக சாம்பியன்ஷிப்பில் ரிவியூக்கள் இல்லாதது விளையாட்டின் உத்வேகத்தை குறைக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

ஒரு மணி நேரம் 12 நிமிடங்கள் நடைபெற்ற போட்டியில் 52 போட்டி புள்ளிகள் ஆடப்பட்டன. இந்த போட்டி ஒளிப்பரப்பு செய்யப்படாத 4வது கோர்ட்டில் நடைபெற்றது. அதனால் ரிவியூ சிஸ்டமும் இல்லாமல் போனது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here