பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய நெல் ஜெயராமன் (50 வயது) இன்று காலமானார். அவருக்கு வயது 50.

நெல் ஜெயராமன் 2 ஆண்டுகளாக புற்று நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனையில் இன்று காலை 5.10 மணிக்கு சிகிச்சைப் பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த கட்டிமேடுவில் 1968இல் பிறந்தவர் நெல் ஜெயராமன். நம்மாழ்வாரை பின்பற்றி இயற்கை விவசாயத்தை பாதுகாக்க போராடியவர் நெல் ஜெயராமன். 174 அரியவகை நெல்விதைகளை சேகரித்ததுடன் மரபணு மாற்ற விதை திட்டங்களை எதிர்த்தவர் ஜெயராமன்.

பாரம்பரிய நெல் வகைகளை காப்பாற்றியதற்காக ஜெயராமன் தேசிய, மாநில விருதுகளை பெற்றுள்ளார். தமிழக இயற்கை உழவர் இயக்கம், நமது நெல்லை காப்போம் அமைப்பை நடத்தி வந்தவர் நெல் ஜெயராமன். 12 ஆண்டாக நெல் திருவிழாவை நடத்திய ஜெயரமானுக்கு சித்ரா என்ற மனைவியும், 11 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

நெல் ஜெயராமனின் இறுதிச்சடங்கு சொந்த ஊரான கட்டிமேடுவில் நாளை மதியம் 12 மணிக்கு நடக்கிறது. இன்று காலை 8 மணி முதல் 11 மணி வரை சென்னையில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here