புதிய இயங்கு தளத்தை உருவாக்கும் ஹூவாவே நிறுவனம்

0
131

கூகுள் நிறுவனம் ஹூவாவேவுடனான வியாபார உறவுகளை முறித்துக் கொள்வதாக கடந்த மாதம் அறிவித்தது. இதனால் ஹுவாவே போன்களில் கூகுள் சேவைகள் மற்றும் பிளே ஸ்டோர் உள்ளிட்ட வசதிகளைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹூவாவே நிறுவனம் சொந்தமாக இயங்கு தளத்தை உருவாக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஹூவாவேயின் புதிய இயங்குதளம்ஓக் ஒ.எஸ். (Oak OS) என அழைக்கப்படலாம் என்றும் இதுஆகஸ்டு அல்லது செப்டம்பர்மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம் எனத் தெரிய வருகிறது.

சீனாவில் ஹூவாவேயின் சொந்த இயங்குதளம் ஹாங்மெங் ஒ.எஸ். என்ற பெயரிலும் சர்வதேச சந்தையில் ஓக் ஒ.எஸ். என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் ஹூவாவேயின் சொந்த இயங்குதளம் ஆர்க் ஒ.எஸ். என அழைக்கப்படலாம் எனக் கூறப்பட்டது.

ஹூவாவே நிறுவனம்,  ஐரோப்பிய யூனியன் மற்றும் இதர அலுவலகங்களில் ஆர்க் ஒ.எஸ். பெயரை பதிவு செய்திருந்தது. எனினும், தற்சமயம் வெளியாகி இருக்கும் புதிய தகவல்களில் ஹூவாவே நிறுவனம் ஹாங் மெங்ஒ.எஸ். / ஓக் ஒ.எஸ். இயங்கு தளத்தை தீவிரமாக சோதனை செய்யத் துவங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

ஹூவாவே நிறுவனம் ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தை அதிகாரபூர்வமாக பயன்படுத்தும் உரிமை, பிளேஸ்டோர் மற்றும் இதர சேவைகளுக்கான அப்டேட்கள் ஆகஸ்டு மாத இறுதியில் நிறைவடைகிறது. இதன் பின் ஹூவாவே நிறுவனம் ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தை ஆண்ட்ராய்டு ஓபன் சோர்ஸ்பிராஜக்ட் (AOSP) முறையில் மட்டுமே பயன்படுத்தமுடியும்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here