இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் உயிரிழப்பு

0
355

திரைப்பட இயக்குநரும் பாடகருமான அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்து, கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்.

ரஜினிகாந்தின் காலா திரைப்படத்தில் “நெருப்புடா” பாடலை பாடி, பிரபலமானவர் இயக்குநர் அருண் ராஜா காமராஜ். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான கனா படத்தை இவர்தான் இயக்கியிருந்தார். இவரது மனைவி சிந்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். அவரது திடீர் மறைவிற்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here