இமாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவைக்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை (இன்று) காலை எட்டு மணி முதல் நடைபெற்று வருகிறது.

மொத்தம் உள்ள 68 தொகுதிகளிலும் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா ஆகிய இரு கட்சிகளும் நேரடியாக போட்டியிடுகின்றன. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை வரும் டிச.18ஆம் தேதி நடைபெறவுள்ளது. இம்மாநிலத்தில் வீரபத்ர சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதன் பதவிக் காலம் வரும் ஜனவரி 7ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது.

காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக வீரபத்ர சிங்கும், பாரதிய ஜனதா கட்சியின் முதல்வர் வேட்பாளராக பிரேம்குமார் தூமல் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

poll-1

1. மொத்தம் 50.25 லட்சம் வாக்களார்கள் உள்ளனர். இதற்காக மொத்தம் 7,525 வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

2. பாதுகாப்புப் பணியில் 11,500 மாநில போலீசாரும், 65 துணை ராணுவப் பிரிவினரும், ஈடுபட்டுள்ளனர்.

3. காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளும் 68 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. அதேபோன்று, பகுஜன் சமாஜ் கட்சி 42 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 14 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூன்று தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

4. கடந்த 2012ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி 36 தொகுதிகளிலும், பாஜக 26 தொகுதிகளிலும் வெற்றிபெற்றிருந்தது.

5. மொத்தம் 338 வேட்பாளர்களில், 158 பேர் கோடீஸ்வரர்களாவர். மேலும், 61 பேர் மீது கிரிமினல் வழக்குகளும், 31 பேர் மீது கொடூர குற்ற வழக்குகளும் உள்ளன.

இதையும் படியுங்கள்: உங்களுக்கு அதிகம் கனவுகள் வருகிறதா? இதைப் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்