இமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் நவம்பர் மாதம் 9ஆம் தேதி நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

இது தொடர்பாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் அச்சல் குமார் ஜோதி, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மொத்தம் 68 தொகுதிகளைக் கொண்ட இமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல், நவம்பர் மாதம் 9ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்றார். மேலும் அவர், இதற்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 18ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் அக்.23ஆம் தேதி என்றும், வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை அக்.24ஆம் தேதி நடைபெறும் என்றும், வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான நாள் அக்.26ஆம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: மன உளைச்சலில் இருக்கும் விவசாயியா நீங்கள்? இதைப் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்