இமயமலையில் தென்பட்டது எட்டியின் கால் தடமா?

0
246

எட்டி(#Yetti ) எனப்படும் பனிமனிதன் இமயமலை பனிபிரதேசங்களில் வாழ்வதாக நம்பப்படுகிறது. இந்நிலையில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த மலையேற்ற வீரர்கள் இமய மலையேறும் போது மிகப்பெரிய அளவிலான காலடித் தடங்களைப் பார்த்துள்ளனர். 

மகாலு முகாம் அருகே எட்டி காலடித்தடம் தென்பட்டதாக இந்திய ராணுவம் கூறியிருந்தது. 

அவற்றை ஆராய்ந்த இந்திய ராணுவத்தினர், அவை எட்டியின் காலடித் தடங்கள் என்று அறிவித்து அண்மையில் டிவிட்ரில் பதிவு ஒன்றை வெளியிட்டனர்.

இந்த நிலையில், இந்திய ராணுவத்தின் கூற்றை நேபாள அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.  இது தொடர்பாக நேபாள ராணுவ செய்தி தொடர்பாளர் கூறியபோது “இந்திய ராணுவத்தின் ஒரு குழுவினர் கால் தடங்களை பார்த்துள்ளனர்.

இந்திய ராணுவத்துடன் எங்களது தொடர்பு குழுவும் உடன் சென்றது. உண்மை என்னவென்பதை நாங்கள் அறிய முயற்சித்தோம்,ஆனால், உள்ளூர் வாசிகளும் போர்ட்டர்களும், காட்டுக்கரடியின் பாத தடங்கள் என அறுதியிட்டு தெரிவித்தனர். மேலும், இது போன்ற தடங்கள் இப்பகுதிகளில் அடிக்கடி தென்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்” என்றுகூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here