டிஜிட்டல் ஊடக உலகில் தலைமை ஏற்க ஆயத்தமாகிறது இப்போது.

எல்லாப் புகழும் இறைவனுக்கே. 2015ஆம் ஆண்டு இந்தியத் திருநாட்டின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று மக்களுக்குச் செய்திகளைச் சுதந்திரமாக வழங்கும் நோக்கத்துடன் எல்லாம் வல்ல இறைவனின் பேரருளால் இப்போது டாட் காம் ஆரம்பிக்கப்பட்டது. பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்திலிருந்து ஒரு நாள் திடீரென்று தமிழின் முதல் கைப்பேசி ஊடகத்தில் (இப்போது டாட் காம்) மாதம்தோறும் பூஜ்யம் சம்பளம் என்ற நிலைக்குப் போகும் பயணம். எல்லா பாரத்தையும் ஆண்டவன் மேல் போட்டு விட்டுத் தொடங்கியாகி விட்டது. என் மனைவி சுபஸ்ரீ தேசிகனும் நண்பர்கள் அவினாஷ், சுனில், ரோஹித், கோடீஸ்வரன், மு.குணசேகரன், பஷீர், ஆரிஃப், யாஸின், ஜின்னா, லிங்கன், அசீஃப், தமிழரசன், ரிலுவான் ஆகியோர் கொடுத்த நம்பிக்கையும் பொருளாதார ஆதரவும் தமிழ் இதழியலில் மிகப்பெரிய தொடக்கத்துக்கு வித்திட்டுள்ளன என்று சொன்னால் சற்றும் மிகையில்லை. எனது ஊடகவியல் ஆசிரியர் கோபாலன் ரவீந்திரன், பள்ளி ஆசிரியர் அகஸ்டின், ஊடகவியல் வழிகாட்டி சீனிவாசன் சீதாராமன் ஆகியவர்களது ஆசீர்வாதம் இந்தப் பயணத்தில் பெரும் துணையாக இருந்தது.

சென்னை சைதாப்பேட்டைகோதாமேடுவிலிருந்து காலை நான்கு மணிக்கே கண்விழித்து பெருங்குடி குப்பைக் கிடங்குக்குச் சென்று தினமும் 800 ரூபாய் வரை சம்பாதிக்கிறார் தன்னாசி. தொழில்முனைவில் அவர் எனக்குப் பெரிய ஆதர்சம். இந்திய சுதந்திரத்தை ஆதரிப்பதற்காக 1878இல் தி ஹிந்துவை நம்பிக்கையுடன் ஆரம்பித்த ஜி.சுப்பிரமணிய ஐயர், திருச்சியிலிருந்து சைக்கிள் ஓட்டி சென்னைக்கு வந்து 1928இல் ஆனந்த விகடனை ஆரம்பித்த எஸ்.எஸ்.வாசன், ஈரோட்டிலிருந்து சென்னைக்கு வந்து 1930களில் சக்தி இதழை நிறுவி நடத்திய வை.கோவிந்தன், 1942இல் மதுரையில் தன்னம்பிக்கையுடன் தினத்தந்தியைத் தொடங்கிய சி.பா.ஆதித்தனார், 1951இல் திருவனந்தபுரத்தில் துணிச்சலுடன் தினமலரைத் தொடங்கிய டி.வி.ராமசுப்பையர் என்று பல கதைகள் இப்போது டாட் காமுக்குப் பெரிய ஊக்கத்தைத் தந்தன. 2015இல் தமிழின் தலையாய டிஜிட்டல் செய்தி பீடங்களில் வாரத்துக்குச் சராசரியாக ஒரு மணி நேரத்தை மட்டுமே சராசரி பயனாளர் செலவிட்டு வந்தார். செய்திகளை நிஜத்துக்கு நெருக்கமாகக் கொண்டு செல்வதன் மூலம் இதனை மேம்படுத்த முடியும் என்ற கருத்தை இப்போது டாட் காம் முன்வைத்தது. இப்போது டாட் காமில் சராசரி பயனாளர் வாரத்துக்கு ஆறு மணி நேரத்துக்கும் அதிகமாக செலவிடுகிறார். இது உலக அளவில் டிஜிட்டல் செய்தி உலகில் முக்கியமான மைல் கல்.

மார்ச் 30, 2020 (திங்கள் கிழமை) அன்று அமேஸான் நிறுவனத்தின் அலெக்ஸா புள்ளிவிவரப்படி அகில இந்திய அளவில் தளங்களின் தர வரிசையில் 3403ஆம் இடத்தைப் பிடித்தது இப்போது டாட் காம். இதழியலின் இலக்கணப்படி மக்களை முதன்மைப்படுத்தி உண்மையை அஞ்சாமல் சொல்வது மட்டுமே இந்த உயரத்தைத் தொட்டதற்குக் காரணம். அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட ஆளுமைகள் இந்தத் தளத்தை வழிநடத்துகிறார்கள். உள்ளடக்கத்திலும் வணிகத்திலும் பெரும் பாய்ச்சல்களுக்குத் தன்னை ஆயத்தப்படுத்தியிருக்கிறது இப்போது. இந்த இதழியல் பெரும் பயணத்தில் தங்களைப் பங்காளிகளாக இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் இதன் நிறுவனர்-ஆசிரியரான என்னோடு உட்கார்ந்து பேசி புதுவிதமான, பயனுள்ள ஒத்துழைப்புகளை உருவாக்கிக் கொள்ளலாம். இந்த வெற்றித் தருணத்தில் எல்லாம் வல்ல ஆண்டவனை மண்டியிட்டுத் தொழுது நன்றிகளைச் சொல்லிக் கொள்கிறேன்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையிலிருக்கும் தவஞானி சதக்கத்துல்லா அப்பாவின் நினைவிடப் பள்ளிவாசலை இறைவனின் வானவர்கள் கட்டியதாக அந்த ஊர் மக்கள் பேசிக் கொள்கிறார்கள். அப்படிப்பட்ட ஓர் அதிசயமாக இப்போது டாட் காமும் தமிழ் மக்கள் முன்னால் எழுந்து நிற்கிறது.  இதுவரை ஒத்தாசைகள் செய்து வரும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். “நான் எப்படியொரு நல்ல இந்துவாக இருக்கிறேனோ, அதேபோல நல்ல முஸ்லிமாகவும் இருக்கிறேன். அப்படிப் பார்த்தால், நான் நல்லதொரு கிறிஸ்தவராகவும் பார்சியாகவும்தான் இருக்கிறேன்,” என்று நம் இந்தியத் திருநாட்டின் தேசத்தந்தை மகாத்மா காந்தி 1947ஆம் ஆண்டில் பிப்ரவரி 16இல் ராய்புராவில் பேசினார். அதுவே எப்போதும் இப்போதுவின் பாதை. வாய்மையே வெல்லும்.

(மார்ச் 31, 2020 அன்று மேம்படுத்தப்பட்டது.)

எல்லாப் புகழும் இறைவனுக்கே

நாதமும் தாளமும் நீயானாய்

ரேஷ்மா: இந்தியாவின் முதல் கப்பலோட்டி

சாதனைத் தமிழச்சி சாதனா

The Raya Sarkar Interview

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here